முதுமை எனும் முதிர்வில்
- by admin
- 20
மழலையை மாற்றி
இளமையை ஊட்டி
இளைப்பாற ஓய்வு கேட்கும்
இதமான பருவமது முதுமை
பல தடைகள் கடந்து
மழலையையும் தன்
தோலில் சுமந்து
தன் மறைவிற்காய்
முதுகினை வளைத்து
தள்ளாடும் நரம்புகளை
நிமிர்த்த-ஓர் கோல்
தேடும் பருவமது முதுமை
மீளமுடியா யுகங்களை கடந்து
மீளத்திரும்பா பல நினைவுகளை
மீட்டிப் பார்க்கும் ஓர் தரிசு நிலமாய்
மிளிருகின்ற பருவமது முதுமை
சிற்றலை சிதறல்களில்
சிதறி ஓடும் சிறுவர் கண்டு
நெட்டலையாய் நோக்குகின்ற
நேறிய பருவமது முதுமை
அனுபவங்கள் அலை போல் அலற
ஆண்மையும் அனல் இழந்து சோர
தன் மறைவிற்காய் நாட்களை
நகர்த்தும் பருவமது முதுமை
இன்னல்கள் பல கண்டும்
இலை மறை காயாய்
தன் புன்னகையை கொண்டு
இன்பங்களை தன் செல்வத்திற்கு
கொடுத்து ஓயும் பருவமது முதுமை
மற்றார் தனை மதித்து
மாண்பாய் பல கதைகள் பேச
மன்றாடும் பருவமது முதுமை
கானலாய் போகும் வேளை
கருணையாய் நடந்து நீயும்
முதன்மையை அதற்களித்து
முக்கியம் கொடுத்திடு
முதுமை எனும் பருவத்தில்
மானிடர் நாம் அளிக்கும்
மகத்தான பண்பெல்லாம்
மலை போன்று எம்மை காக்கும்
நம் முதுமை எனும் பருவத்தில்!
Shima Harees
University of Peradheniya
Puttalam karambe
மழலையை மாற்றி இளமையை ஊட்டி இளைப்பாற ஓய்வு கேட்கும் இதமான பருவமது முதுமை பல தடைகள் கடந்து மழலையையும் தன் தோலில் சுமந்து தன் மறைவிற்காய் முதுகினை வளைத்து தள்ளாடும் நரம்புகளை நிமிர்த்த-ஓர் கோல்…
மழலையை மாற்றி இளமையை ஊட்டி இளைப்பாற ஓய்வு கேட்கும் இதமான பருவமது முதுமை பல தடைகள் கடந்து மழலையையும் தன் தோலில் சுமந்து தன் மறைவிற்காய் முதுகினை வளைத்து தள்ளாடும் நரம்புகளை நிமிர்த்த-ஓர் கோல்…