என் இதயப் புத்தகம்

  • 11

இரவல் கேட்காதே – என்
இதயப் புத்தகமதை
இரங்கியும் தரமாட்டேன்

உருகிக் கேட்காதே – என்
இதயப் புத்தகமதை
உனக்குத் தர மாட்டேன்

வலிந்து கேட்காதே – என்
இதயப் புத்தகமதை
வாரித் தரமாட்டேன்

வருபவர் போரவரெல்லாம்
வாசித்துப் பார்க்க – அதுவொன்றும்
சுவரொட்டியல்ல

கண்டவர் கதைத்தவரெல்லாம்
கரந்தொட்டு பிரிக்க – அது
பத்திரிகையுமல்ல

தனித்துவமானதும்
இரகசியமானதுமோர்
உணர்வுள்ள நாட்குறிப்பு – அது
வெளிப்படையான
மறைமுகமான என்
வாழ்க்கையின் அடிக்குறிப்பு

பொருத்தமான நேரத்தில்
பொருத்தமான வாசகருக்கு
பத்திரமாய் நான் கொடுக்க
புத்தியோடு வைத்துள்ளேன்

கேட்காதே!
என்னிதயப் புத்தகமதை
கேட்காதே!

நேசமென்னும் வாசிப்பை
முழுமையாக பொழியுமோர்
உள்ளத்தினால்

என் இறந்தகால பக்கங்கள்
ஏற்கப்பட
நிகழ்கால பக்கங்கள்
இரசிக்கப்பட
எதிர்கால பக்கங்கள்
வரவேற்கப்பட
இதயப் புத்தகமதை
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்

காதலர் தினமெனும்
கடுந்தீயில் அதை – நான்
எரிய விடமாட்டேன்
விபச்சார தினமெனும்
வீண் தினமதில் அதை – நான்
கிழித்து விடமாட்டேன்

கேட்காதே!
இரங்கியும் உருகியும்
வலிந்தும் கேட்காதே!
என் இதயப் புத்தகமதை

நீ எப்படிக் கேட்டாலும்
அதை தரமாட்டேன்

பொருத்தமான நேரத்தில்
பொருத்தமான வாசகனுக்கென
படைத்தவனிடம் பாரஞ்சாட்டி
பத்திரமாய் நான்
வைத்திருப்பதுதான்
என் இதயப் புத்தகம்.

Rustha salam

இரவல் கேட்காதே – என் இதயப் புத்தகமதை இரங்கியும் தரமாட்டேன் உருகிக் கேட்காதே – என் இதயப் புத்தகமதை உனக்குத் தர மாட்டேன் வலிந்து கேட்காதே – என் இதயப் புத்தகமதை வாரித் தரமாட்டேன்…

இரவல் கேட்காதே – என் இதயப் புத்தகமதை இரங்கியும் தரமாட்டேன் உருகிக் கேட்காதே – என் இதயப் புத்தகமதை உனக்குத் தர மாட்டேன் வலிந்து கேட்காதே – என் இதயப் புத்தகமதை வாரித் தரமாட்டேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *