பெண்களுக்கு சம உரிமை

  • 17

மனித வாழ்க்கையை பொறுத்த வரையில் பால் ரீதியாக ஆண்கள் மாத்திரம் அல்லது பெண்கள் மாத்திரம் தனியாக இவ்வுலகில் வாழ முடியாது. அவ்வாறே இணைந்து வாழ்ந்து சமூக வாழ்வை கட்டியெழுப்ப ஆண்களுக்கும் பெண்களுக்கும் விஷேட தனிச்சிறப்புக்களும், உரிமைகளும், கடமைகளும் உள்ளது. அன்று முதல் இன்றுவரை மனித சமுகம் ஆண்களினதும், பெண்களினதும் பலம், பலவீனத்தை இனங்கண்டு அவர்களுக்கான உரிமைகளையும் பொறுப்புக்களையும் வரையறுத்துள்ளது. ஆனால் இன்று பெண்ணிலைவாதிகளால் உலகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற கோசம் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளது.
இந்த வாதம் தவறானது.

இங்கு சம உரிமை எனக் கூறுவதன் கருத்து, ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பதாகும். ஆனால் அடிப்படையில் ஆண்களுக்கு இயலுமான அனைத்து காரியங்களையும் பெண்களால் செய்ய முடியாது. அவ்வாறே பெண்களால் செய்ய முடியுமான அனைத்து காரியங்களையும் ஆண்களாலும் செய்ய முடியாது. இந்நிலையில் இருவருக்கும் சம உரிமை கோறுவது நகைப்பாக உள்ளது.

இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை கோரியதன் கொடுரம்தான் சமூக வாழ்க்கை சீரழிந்துள்ளது. அதாவது சமூகத்தில் பெண்களுக்கென விசேட கருமங்கள் உள்ளன அதாவது குழந்தை பராமரிப்பு, சிறுவர்களுக்கு கற்பித்தல், நிறுவனங்களில் தலைமைத்துவத்தை ஏற்காது செயலாளர், முகாமைத்துவ உதவியாளர் போன்ற பணிகளுக்கே பெண்கள் பொறுத்தமானவர்கள். ஆனால் இன்று சம உரிமை என்ற பெயரில் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்பளித்தல், கம்பனிகளில் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற கோசங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளது.

அவ்வாறே தொழில், தேர்தல் அரசியல் போன்றவற்றில் இன்று சம உரிமை என்ற பெயரில் இணைந்தமையினால் பெண்களுக்கு சிரமத்திற்கு மேல் சிரமத்தை சமூகம் வழங்கியுள்ளது. இதனால் பெண்கள் தம் பிள்ளைகளை பராமரிக்கின்ற வீதம் குறைவடைந்துள்ளது. இதனால் இன மத பேதமின்றி சமூகம் சீரழிந்த வண்ணமுள்ளது. மேலும் இன்று பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்ற பெயரில் கோசமிடுவோர் எல்லோரும் பெண்களை வியாபார பொருளாக பயன் படுத்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சம உரிமை என்ற பெயரில் கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனிமையில் சந்திக்கும் ஆணும் பெண்ணும் தத்தமது கற்பை இழந்து கொள்கின்றனர். இதனால் கல்லூரி வாழ்விற்கு பின்னால் சமூக வாழ்வில் இணையும் பல பெண்கள்தான் பாதிக்கின்றனர். பெண்களுக்கு உரிமைகள் அளிக்க வேண்டும். ஆனால் அது ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமையாக இருக்க கூடாது. ஆண், பெண் இன பலம் பலவீனங்களை இனங்கண்டு மேலும் சமுக குடும்ப வாழ்வில் அவர்களுக்குள்ள பொறுப்புகளுக்கேற்ப நீதியான முறையில் உரிமைகள் வழங்க வேண்டும்.

கலாசார சீரழிவுகளை ஏற்படுத்த துணை போகின்ற பெண் சம உரிமை சமூகத்திற்கு பொருத்தமற்றது. மாறாக சமுக வாழ்வை சிறந்த முறையில் கட்டியெழுப்ப சம நீதியான முறையில் ஆண் பெண் இருபாலருக்கும் தொழில், திருமணம், அரசியல் போன்றவற்றில் உரிமைகள் வழங்க வேண்டும்.

Ibnuasad

மனித வாழ்க்கையை பொறுத்த வரையில் பால் ரீதியாக ஆண்கள் மாத்திரம் அல்லது பெண்கள் மாத்திரம் தனியாக இவ்வுலகில் வாழ முடியாது. அவ்வாறே இணைந்து வாழ்ந்து சமூக வாழ்வை கட்டியெழுப்ப ஆண்களுக்கும் பெண்களுக்கும் விஷேட தனிச்சிறப்புக்களும்,…

மனித வாழ்க்கையை பொறுத்த வரையில் பால் ரீதியாக ஆண்கள் மாத்திரம் அல்லது பெண்கள் மாத்திரம் தனியாக இவ்வுலகில் வாழ முடியாது. அவ்வாறே இணைந்து வாழ்ந்து சமூக வாழ்வை கட்டியெழுப்ப ஆண்களுக்கும் பெண்களுக்கும் விஷேட தனிச்சிறப்புக்களும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *