விதியின் விளையாட்டு

  • 9

இன்று மனித வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் எமக்கு பல ஆச்சரியங்களையும், படிப்பினைகளையும் உணர்த்திக்கொண்டிருப்பதை காணலாம்.

அதாவது வாழ்க்கை பயணத்தில் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் ஏற்படும் போது மனிதன் அதனை ஏற்றுக்கொள்வதை மறுக்கிறான் அதேபோல் விரக்திநிலைக்கு செல்வதை காணலாம்.

ஆனால் அதற்கு ஏற்றாற் போல் அந்த மாற்றங்களுடன் வரும் அருள்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை இன்று நாம் தவறவிடுகிறோம்.

எம்மில் பலரின் புலம்பல் எதிர்பார்த்தது ஒன்று கிடைத்தது ஒன்று என்று வாழ்க்கை முழுவதும் புலம்பிக்கொண்டிருப்பவர்கள் எம்மில் இல்லாமலில்லை.

நாம் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்துவிட்டால் இறைவன் ஒன்று இல்லை என்று ஆகிவிடும் அல்லவா. எம்முயற்சியையும் தாண்டி ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கும் உண்மையை நாம் மறுக்கலாகாது. அது தான் இறைநியதி.

எமது எதிர்ப்பார்ப்பிற்கு மாற்றமாக இந்த இறைநியதியின் ஆச்சரியங்களை கண்டு நாம் புலம்பிக் கொண்டு விரக்தியடைவதில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக அந்த சவாலை முகங்கொடுத்து அதனை ஏற்று அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நீங்கள் உண்மையாக வாழ்கிறீர்கள் என்பதற்கு அர்த்தம். ஆக சவால்களை முகங்கொடுத்த மறுநிமிடமே தீர்வுகளை நோக்கி செல்ல வேண்டும்.

பொதுவாக எல்லோரது வாழ்க்கையிலும் சவால்கள் நிறைந்த, எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றம் அடைந்த பல நிகழ்வுகள் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இப்படி மனமுடைந்து புலம்பிக் கொண்டு இருக்கவில்லை அப்படி இருந்திருந்தால் உலகம் இன்று வளர்ச்சி அடைந்தும் இருக்காது, பல சாதனையாளர்கள் தோன்றியிருக்கவும் மாட்டார்கள்.

வாழ்க்கையில் பல மாற்றங்கள் வரும் கஷ்டம், துன்பம் எதுவும் நிலைத்திருக்காது எல்லாம் மாறிவிடும் ஆனால் நாம் எடுக்கும் முடிவுகள் தான் எம்மை எப்படி வாழவைக்கின்றது என்பதை தீர்மானிக்கும்.

எனவே இப்படியான நிகழ்வுகள் எம் வாழ்வில் இடம்பெறும் அப்போது எமது சக்தியை விட இறைவனின் சக்தி மேன்மையானது என்ற உண்மையை உணர்ந்து விதியின் ஏற்பாட்டில் குறைகொள்வதையும், அதை வருந்தி புலம்பிக்கொண்டிருப்பதையும் விட்டு தவிர்ந்து கொள்வோம்.nஇன்ஷா அல்லாஹ்.

நீ விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு காலப்போக்கில் அதுவே உனது விருப்பத்திற்குரியதாக மாறும். நீ கேட்டதை தருவது மட்டும் அல்ல அல்லாஹ்வின் செயல் நீ கேட்டதை தடுப்பதும் அல்லாஹ்வின் செயல் தான். எமது தெரிவை விட அல்லாஹ்வின் தெரிவு மிகச் சிறந்ததாக இருக்கும்.

Faslan Hashim

இன்று மனித வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் எமக்கு பல ஆச்சரியங்களையும், படிப்பினைகளையும் உணர்த்திக்கொண்டிருப்பதை காணலாம். அதாவது வாழ்க்கை பயணத்தில் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் ஏற்படும் போது மனிதன் அதனை ஏற்றுக்கொள்வதை மறுக்கிறான்…

இன்று மனித வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் எமக்கு பல ஆச்சரியங்களையும், படிப்பினைகளையும் உணர்த்திக்கொண்டிருப்பதை காணலாம். அதாவது வாழ்க்கை பயணத்தில் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் ஏற்படும் போது மனிதன் அதனை ஏற்றுக்கொள்வதை மறுக்கிறான்…