செல்பி எடுக்கப் போய் நீரில் மூழ்கி மரணித்த தந்தை மற்றும் மகன்

தெனியாய பல்லேகம சத்மலை நீர்வீழ்ச்சியில் நீராட வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, ஜிந்தோட்டை, மஹா ஹபுகல பகுதியைச் சேர்ந்த மொஹமட் தாஹிர் மொஹமட் மன்சார் (வயது 48) மற்றும் அவரது மகன் மொஹமட் மன்சார் மொஹமட் மொஹீர் (வயது 16) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது படியில் இருந்து தனது மகனை புகைப்படம் எடுக்க தயாராகி கொண்டிருந்த போது மகன் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற தந்தை நீர்வீழ்ச்சியில் குதித்ததாகவும், அதன் பின்னர் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களை கடற்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளனர். தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.