காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 78

  • 10

“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு அரசன் தன்னோட நாட்டை அவன் இஷ்டப்படி மக்களை எல்லாம் கஷ்டப்படுத்திக்கிட்டு ஆண்டுவந்தான். அவன் ஒரு வலிமையான வாலிபன். சக்திவாய்ந்த கடவுள்களின் வரத்தை பெற்ற மாவீரன் ஆனா முரடன். அவனோட தொல்லை தாங்காத மக்கள் எல்லோரும் அவனை பற்றி கடவுள்கிட்ட முறையிட்டார்கள். அதனால அவனை சாதாரணமாக அழிக்க முடியாது என்று அறிந்த கடவுள்கள் அவனுக்கு சமனான உருவத்தில், அவனைவிட வலிமையான ஒரு மனிதனை படைத்தார்கள். அந்த கொடிய அரசனை கொல்வதற்காகவே அவன் படைக்கப்பட்டான்.”

என்றதும் என்கிடுவுக்கு புரிந்து விட்டது. அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அமைதிகாக்க வேண்டியதாயிற்று. அவளும் அதை அறியாமல் இல்லை.

*************

கில்கமேஷ் காரை எடுத்துக்கொண்டு மலைப்பாங்கான ஒரு இடத்துக்கு சென்றான்.

“இதுக்கு மேல வண்டி ஓட்ட முடியாது மா முன்னாடி பெரிய பள்ளத்தாக்கு இருக்கு.”

என்று டாக்சி ட்ரைவர் சொல்ல,

“என்னது… பள்ளமா… ஐயோ! சரி இந்தாங்க…” என்று பணத்தை நீட்டிவிட்டு டாக்சியில் இருந்து இறங்கி ஓடி வந்தாள்.

“கில்கமேஷ்!!!”

அந்த மேடு கொஞ்சம் கரடு முரடான தோற்றத்துடன் இருந்ததால் கில்கமேஷாலும் வண்டிய வேகமா செலுத்த முடியவில்லை. சரியாக பள்ளத்தாக்கு நுனியில் கார் போய் நிற்க, எங்கே விழுந்தே விட்டதென எண்ணி பயத்தில் கத்தி கொண்டே டிடானியா கையால் முகத்தை மூடி கொண்டாள். நல்ல வேளை எதுவும் ஆகவில்லை. டிடானியா மேலும் முன்னேறி சென்று காரை நெருங்கி சற்று முன்னாடி எட்டிப்பார்த்து விட்டு,

“கடவுளே! விழுந்தா எலும்பு கூட மிஞ்சாது போல இருக்கே!”

என்றெண்ணி கொண்டு கார் கதவை தட்டி கில்கமேஷை இறங்க சொன்னாள். ஸ்டியரிங்கை பிடித்து கொண்டு கல்லு போல உட்கார்ந்து இருந்தவன். சற்று நேரத்தில் காரை பின்புறம் எடுத்து விட்டு இறங்கி கொண்டான். இறங்கி வந்தவனுக்கு எதையும் யோசிக்காமல் ஒரு அறை விட்டாள் டிடானியா. அவன் அதை எதிர்பார்க்க வில்லை. அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

“இல்லை… என்ன நினைச்சி கிட்டு இருக்கிறே உன் மனசில முன்னாடி பார்த்தேல்ல எவ்வளவு பெரிய பள்ளம். லூசு மாதிரி இங்க வந்து நிக்குறே. தப்பு தான் ஸாரி… விக்டர் அப்படி கேட்டு இருக்க கூடாது. அவன் தான் புரியாமல் ஏதோ கேட்டா… உனக்கு எங்க போச்சு புத்தி…”

என்று நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டாள் டிடானியா.

“அவன் சரியாக தான் கேட்டான். அவன் கேட்டதில் எந்த தப்பும் இல்ல. ஆனா என்னால தான் எனக்கே பதில் சொல்ல முடியல்ல. அப்படியே செத்துடலாம் என்னு தோணிச்சு.” என்றான்.

“ரொம்ப நல்லாயிருக்கு நீ பேசுறது. கில்கமேஷ்! நான் உன்னோட வாயில் இருந்து இப்படிப்பட்ட ஒரு கோழைத்தனமான வார்த்தைகளை நிச்சயமாக எதிர்பார்க்கவே இல்லை. எப்படி உன்னால இப்படி சொல்ல முடியுது.” என்று திருப்பி கேட்டாள்.

“ஒரு வேளை விக்டர் சொன்னது போல என்கிடுவா இல்ல ஜெனியா என்று ஒரு நிலை வந்தால்… என்னால கண்டிப்பாக யாரையும் யாருக்காகவும் இழக்க முடியாது… டிடானியா..”என்றவன்… சிறு குழந்தை போல அவளை அணைத்து கொண்டு அழுது விட்டான்…

அவளால் அவனை எப்படி சமாதானம் செய்ய முடியும்?

************

“நீ யாரோட ஆளுன்னு இப்போ எனக்கு புரிஞ்சி போச்சி லீஸா ஆனா என்னோட வாக்கு ஒன்றிற்காக நான் பொறுமையா இருக்கேன்.”

என்றான் என்கிடு.

“இதுவரை தானே உனக்கு தெரியும் என்கிடு கண்டிப்பாக நீ புரிஞ்சு கொள்ளுவே எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.”

என்றவள் அவனை பார்த்து சிரித்தாள். ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவனுள் அமைதியை வருவித்தது. அவளும் தொடர்ந்தாள்.

“கில்கமேஷை கொல்றதுக்காக சம்மாது என்ற பெண் உன்னை இந்த நகரத்துக்கு கூட்டிகிட்டு வந்தாள். உங்களுக்குள்ள முதல் பார்வையிலேயே ஒரு பெரிய சண்டை நிகழ்ந்தது. நீதான் பெரிய வீரனாச்சே அவனை ஜெயிச்சிட்டே அவனுக்கு உபதேசம் பண்ணினே அவனை ஒரு மனிசனா மாத்தினே அவனை”

“போதும்.”

என்று பொங்கினான் என்கிடு அவள் பயந்து விட்டாள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு அரசன் தன்னோட நாட்டை அவன் இஷ்டப்படி மக்களை எல்லாம் கஷ்டப்படுத்திக்கிட்டு ஆண்டுவந்தான். அவன் ஒரு வலிமையான வாலிபன். சக்திவாய்ந்த கடவுள்களின் வரத்தை பெற்ற மாவீரன் ஆனா முரடன். அவனோட…

“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஒரு அரசன் தன்னோட நாட்டை அவன் இஷ்டப்படி மக்களை எல்லாம் கஷ்டப்படுத்திக்கிட்டு ஆண்டுவந்தான். அவன் ஒரு வலிமையான வாலிபன். சக்திவாய்ந்த கடவுள்களின் வரத்தை பெற்ற மாவீரன் ஆனா முரடன். அவனோட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *