மறை கூறும் முஸ்லிம் யுவதியும் மானம் இழந்துள்ள முஸ்லிம் பெண்களும்…

  • 1

இஸ்லாம் ஒரு சாந்தியான மார்க்கம். சுமூகமான மார்க்கம். அமைதியான மார்க்கம். அருமையான மார்க்கம். இந்த மார்க்கத்தை ஆராயும் தேடிப்படிக்கும் எவ்வளவு பெரிய கொள்கைவாதியானாலும் அவன் இறைவேதத்திற்கு அடிபணியும் ஒரு இயல்பு, சிறப்பு, தனித்துவம், உள்ள மார்க்கம் இந்த இஸ்லாம் மார்க்கம்.

அந்த வகையில் இவ்வாறான மார்க்கத்தில் மட்டுமே பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த பிரபஞ்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. வெறும் மோகப்பொருளாக, இச்சையை தீர்க்கும் சதைத்துண்டாக, ஆண்களின் காமவேட்கைக்கு தீணி போடும் இயந்திரமாக, தரித்திரியமாக, அபசகுணமாக, தவசிகளாக, அடிமைகளாக பார்த்த மனிதனெனும் மிருக வர்க்கத்தை ஓரந்தள்ளி உத்தமிகளையும், சுவர்க்கத்தின் தலைவியையும், சிறந்த குடும்ப பெண்களையும், தியாகப் பெண்மணிகளையும் உருவாக்கி அவர்களது பெயர்கள் நாளை மறுமை வரை பேசக்கூடிய வகையில் பெண்கள்பற்றியே அந்நிஸா என்ற அத்தியாயத்தையும் அருளி பெண்குலத்தை கண்ணியப்படுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.

இந்த அளவு கண்ணியப்படுத்தப்பட்ட பெண்கள் இன்று தம் கண்ணியத்தை தாமே இழந்து கொண்டு செல்வது தான் வேதனைக்குறியவிடயம். அந்தவகையில் எம் முஸ்லிம் பெண்மணிகளின் ஆடைகலாச்சாரம் பற்றி பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்

ஓர் நிமிடம் இந்தக்கட்டுரைக்குள் நுழைய முன்னால் “இந்தக்கட்டுரை நாம் இஸ்லாமிய வரம்பை பேணி வாழ்கிறோம் என நினைத்தைக்கொண்டிருக்கும் சகோதரிகளுக்கும் சாலப் பொருந்தும்.”

ஆடையை ஒரு மனிதன் இரண்டு நோக்கங்களுக்காக அணிகிறான். ஒன்று தமது அவ்ரத்தை மறைக்க, அடுத்து தன்னை அலங்கரிக்க. இன்று அலங்கரிப்பு அதிகரித்து அவ்ரத் மறைப்பு அருகி வருகின்ற ஒரு காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். நபி(ஸல்)அவர்கள் ஒரு சமூகத்தில் இரண்டு தரப்பு சீராக இருந்தால் ஏனையவை சீராகி விடும் என்றார்கள்.

1.ஆட்சியாளர்கள்.
2. குறித்த சமூகப்பெண்கள்.

ஒரு சமூகத்தில் அந்தளவு முக்கியமான பங்கை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் அதை உணராத எம் யுவதிகள் இன்று தம் சுயமரியாதையை இழக்கவேண்டிய அளவு அவர்களாகவே தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையிலே இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைகள் 80% வீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமிய வரம்புகளை மீறியதாகவே இருப்பதாக அண்மைய பாகிஸ்தான் பல்கலைக்கழக ஆய்வொன்று குறிப்பிடுகிறது. அந்தப் பல்கலைகழக ஆய்வின் இறுதியில் இந்த ஆடை சீர்கேட்டுக்கு பிரதான காரணமாக ஹிஜாப் புறக்கணிக்கப்பட்டமை மற்றும் ஹிஜாப் பற்றிய அறிவின்மை ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக கூறுவதாயின் இந்த நவீனகாலத்தில் ஒரு முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ்வது கடினம் என்று எம் யுவதிகள் கூறும் அறிவற்ற நிலைமை மோசமானது.

நபி(ஸல்) அவர்கள் “ஒரு பெண் தனது அழகை தன் கணவனைத்தவிர வேறு எவருக்கும் காண்பிக்கக்கூடாது” என கூற நம் யுவதிகள் தம் புருவங்களை சீர் செய்பவர்களாக, திருமண வைபவங்களின் போது இஸ்லாமிய ஆடையை மறந்தவர்களாக, உலகின் அற்ப ஆசைகளுக்கெல்லாம் ஹிஜாபை மறந்து விட்டவர்களாக உலா வருகின்றனர்.

அல்குர்ஆனில் சூறதுத்தஹ்ரீம் ஐந்தாவது வசனத்தில் ஒரு முன்மாதிரி முஸ்லிம் பெண்மணிக்குரிய இயல்புகளில் ஒன்றாக அவள் முஸ்லிமாக அன்றி முஃமினாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அனைவரும் பரம்பரை மூலம் பெயர் மூலம் முஸ்லிமாக இருக்கலாம். தஹஜ்ஜத் ஐவேளை தொழுகை சுன்னத்தான தொழுகை என்று நிறைவேற்றலாம். ஆனால் அல்லாஹ்வினைடைய வழிகாட்டலை ஏற்று நம்பி அவற்றை நிறைவேற்றுகையில் அவளுடைய ஆடை, பேச்சு, நடத்தை என்பன இஸ்லாமிய வரையறைகளை பேணவில்லையென்றால் அவள் முஃமினாக முடியாது. என தப்ஸீர் ஆசிரியர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

இன்றைய எம் சமூக யுவதிகள் ஆடை அணிந்தும் நிர்வாணிகளாகவே இருக்கின்றனர்.

ஹிஜாப் அணிந்து முகநூலில் வாட்ஸ் அப்பில் status வைக்கும் சகோதரிகள் அது ஹிஜாபின் வரையறையை மீறிய செயல் என்பதை மறந்துவிட்டனர். உள்ளாடை தெரியும் அளவுக்கு ஆடை அணிந்த யுகம் மாறி உள்ளாடையையே ஆடையாக அணியும் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உள்ளாடைகளின் நிறத்தை அந்நிய ஆடவன் ஊகித்து கண்டுபிடிப்பது எம் முஹம்மத் நபியின் உம்மத் என கூறிக்கொள்ளும் யுவதிகளுக்கு பெருமையாக போய்விட்டது. அந்தளவுக்கு மெல்லிய ஆடைகளை அணிகின்றனர் எம் யுவதிகள்.

கவர்ச்சிகரமான ஆடை.

கவர்ச்சிகரமான ஆடை என்றதும் எம் சகோதரிகள் தம் உடலுறுப்பு தெரியாமல் அணிவது  கவர்ச்சி என நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அதிக வேலைப்பாடுகள் உடைய அந்நிய ஆடவனின் பார்வையை தன்பக்கம் இழுக்கக்கூடிய ஆடைகள் கூட கவர்ச்சிகரமான ஆடைகள் தான்.

அடுத்து நவீன fashion எனும் அடிப்படையில் வெளிவரும் விபச்சார சினிமா நடிகைகள் முன்மாதிரியாக காட்டும் வகைவகையான ஆடைகளை அணிகிறார்கள். ஆனால் இந்த ஆடை அல்லாஹ்வை திருப்திபடுத்துமா?? என சிந்திக்க மறந்துவிட்டார்கள்.

முகம்,கை மட்டும் தான் பெண்ணின் வெளித்தெரியக்கூடிய உறுப்புகள் என கூறிக்கொண்டிருக்க சிலர் முகம், கை கூட மறைக்கப்படவேண்டும். என வாதிட்டுக்கொண்டிருக்க, நம் சகோதரிகள் கால், கை கழுத்து என்பவை தாண்டி leging எனும் பெயரில் சல்வார் அணிந்து மறைக்கவேண்டிய அணைத்துப்பகுதிகளையும் வெளித்தெரிய அணிந்து செல்கின்றனர்.

அடுத்து ஹிஜாபை மறந்து shall reping என்று ஒரு அநியாயம்.

ஹிஜாப் கடமையாகியதே மார்பகங்கள் மறைக்கப்படவேண்டும் என்பதற்காக தான். ஆனால் மார்பகம் தெரிய shall rep பண்ணுவது தான் இப்போ fashion. இருக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க ஹபாயா அறிமுகமாகியது. ஆனால் ஹபாயாவை இருக்கி அணிவது தான் fashion. slimfit ஹபாயா, frock ஹபாயா, வௌவால் ஹபாயா என அதையும் fashion ஆகிவிட்டனர் நம் யுவதிகள். குறிப்பாக கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஹபாயாவின் வடிவமே மாறிவிட்டது. இந்த ஹபாயாக்களில் இடுப்புப்பகுதி இருக்கி பின் அங்கம் வெட்டி விளங்கும் வகையில் அமைந்துள்ளது இன்றைய ஹபாயாக்கள்.

இவ்வாறு எம் சமூக ஆடைகலாச்சாரம் சீர்கெட்டுவிட்டது. இங்கே நான் குறிப்பிடுவது எம் இலங்கை திருநாட்டில் நடைபெறும் ஆடைகலாசாரத்தை தான்.

உங்களது ஆடை உங்களை பற்றி கற்க ஆர்வமூட்ட வேண்டுமே தவிர உங்களை கற்பழிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக இருக்கக்கூடாது.

ஆடை விடயத்தில அந்நிய சமூகம் விழித்துக்கொண்டு விட்டது. பாடசாலைக்கு பெற்றோர்கள் செல்வதாயினும் ஏனைய பிரத்தியேக வகுப்புகளிலும் தனியார் கல்வி சார் நிறுவனங்களிலும் கூட ஆடை வரையறைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். முஸ்லிம் பெண்களின் ஆடைகலாச்சாரம் சீராக இருந்த காலத்தில் முஸ்லிம் பெண்கள் மதிக்கப்பட்டனர். இன்று சந்திக்கு சந்தி மிதிக்கப்படுகின்றனர்.

தொழுகை நிறைவேற்றி நோன்பு நோற்று பயனில்லை. எம் ஆடை அந்நிய ஆடவர் ரசித்து அவன் இச்சையை தூண்டி விபச்சாரத்திற்கு வழி அமைத்து நீங்களும் உங்களை அறியாமலே விபச்சாரம் செய்த பாவத்திற்கு ஆளாகுவீர்கள்.

இறுதியாக உங்களது உடல் உங்கள் ஈமானை மட்டுமல்ல அடுத்தவர் ஈமானைக்கூட பாலாக்கும் என்பதை மனதில் நிறுத்தி பல உறைகளால் மூடி மறைத்து வைக்கப்பட்ட சாக்லேட் தான் சுவை அதிகம் மற்றும் அது பாதுகாப்பாகவும் இருக்ககும். திறந்து வைத்தால் ஈ, தூசு, எறும்பு என பல அதன் இயல்பை மாற்றி பிரயோசனமற்றதாகிவிடும்.

என் அன்பு சகோதரிகளே! இனியாவது சிந்தித்து செயல்படுங்கள்.

பஸீம் இப்னு ரசூல்..

இஸ்லாம் ஒரு சாந்தியான மார்க்கம். சுமூகமான மார்க்கம். அமைதியான மார்க்கம். அருமையான மார்க்கம். இந்த மார்க்கத்தை ஆராயும் தேடிப்படிக்கும் எவ்வளவு பெரிய கொள்கைவாதியானாலும் அவன் இறைவேதத்திற்கு அடிபணியும் ஒரு இயல்பு, சிறப்பு, தனித்துவம், உள்ள…

இஸ்லாம் ஒரு சாந்தியான மார்க்கம். சுமூகமான மார்க்கம். அமைதியான மார்க்கம். அருமையான மார்க்கம். இந்த மார்க்கத்தை ஆராயும் தேடிப்படிக்கும் எவ்வளவு பெரிய கொள்கைவாதியானாலும் அவன் இறைவேதத்திற்கு அடிபணியும் ஒரு இயல்பு, சிறப்பு, தனித்துவம், உள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: