குரங்கு மனசு பாகம் 04

  • 10

தன் மனைவி தன் தாயுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அதீகின் ஆசையாக இருந்தாலும், இந்தத் திடீர் பயணம் வெற்றியளிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கவில்லை.

“யா அல்லாஹ்! என் உம்மா சர்மிய ஏத்துக்கனும், அவளுக்கு ஏதும் சொல்லிடக் கூடாது” என்ற அவன் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப் படுமோ என்னவோ? சர்மியின் விருப்பப்படி குறித்த இடத்துக்கு வாகனம் வந்து நின்றது..

“சர்மி”

“என்ன ஹபி?”

“இது உன் மாமி வீடு, இப்போ நீ சொன்னா கூட திரும்பி போயிடலாம் பிளீஸ்மா..”

கணவனின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்கும் முகமாக தனதான பக்கக் கார்கதவை திறந்து விட்டாள் சர்மி.

“ஹே! இரி இரி என்னா அவசரம்?”

“மாமி நீங்க புள்ளய தாங்க, முதல்ல நான் மட்டும் எடுத்துட்டு போறன். உம்மா ஓகே ஆவினா சர்மிய கூடிட்டு போறன். அதுவர கார்ல வெய்ட் பண்ணுங்க..”

“ஹபி என் மாமிய நான் தான் பார்க்க வேணும்னு சொன்னன், உங்க கூடவே இப்போ நானும் வருவன்.”

“சர்மி நான் சொல்றது எதயும் நீ கேக்க மாட்டியா?”

“இந்த விஷயத்துல எது சொன்னாலும் இனி கேக்க மாட்டன். மாமிக்கு என் மேல கோவம் இருக்குறதுல நியாயம் இருக்கு, அவ என்ன சொன்னாலும் நான் தாங்கி கொள்வன்.”

“ஹ்ம்ம்ம் அப்போ வா போகலாம்..” தன் அத்தையின் கையில் இருந்த குழந்தையை தூக்கி எடுத்த அதீக், சர்மியின் கைபற்றி அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

“உ… உம்.. உம்மா.. உம்மா.. உம்மா..

என்னடா வாசல்ல இருந்துட்டு கத்துற வா உள்ள”

“தன் மூத்த மகனாயிருக்கும்” என்ற நினைப்பிலே உள்ளிருந்து குரல் வர, மகிழ்ச்சி பொங்க மனைவியுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

இரண்டரை வருடங்களுக்குப் பின் தான் பிறந்த வீட்டுக்கு வந்துள்ளது அதீகை குளிர வைக்க, தான் ஓடி, நடந்து, படுத்து, உருண்டு, எழும்பிய இடங்களை எல்லாம் நோட்டமிட்டுக் கொண்டே இன்னும் நகர்ந்தான்.

“நில்லு” திடீரென்று வந்த அக் குரல் அதீகையும், அவன் மனைவியையும் ஒரு கணம் அதிரவைக்க அப்படியே நின்றார்கள்.

“இங்க எதுக்கு வந்த?’ கேட்டது அதீகின் தாய் வாஹிதா தான்.

“உம்மா..”

“யாரு யாருடா உனக்கு உம்மா? எப்பவோ முடிஞ்சி போன உறவது.”

“உம்மா எ.. என் கொழந்த?”

“இந்த கொழந்தைக்கு உம்மா இவள் தானே?”

கணவனோடு உராய்ந்தவளாய் பக்கத்திலிருந்த சர்மியை காட்டி வாஹிதா கேட்க,

“உம்மா எதுவும் சொல்ல வேணாம் பிளீஸ், உங்கள பார்க்கவே வேணும்னு அவள் சொல்லித் தான்  வந்தன்” தன் தாயிடம் மன்றாடினான் அதீக்.

“ஹோ! அந்த பாசம் எங்கிருந்து வந்தது இவளுக்கு? என்ன, உன்ன எல்லாம் ஏமாத்திட்டு போனவள் தானே இவள்? இப்போ எனக்கு இவள் யாருமில்ல..”

“மாமி தப்பு செஞ்சது நான் தான். அதுக்கு என்ன வேணும்னாலும் சொல்லுங்க. ஆனா என்ன ஏத்துக்காம மட்டும் இருந்திடாதிங்க.” கண்கள் நீரால் நிறைய பேசினாள் சர்மி.

என் புள்ள நீ தான் வேணும்னு ஒத்தகால்ல நின்றப்போ நான் சரி சொன்னன், ஏனா.. அது அவனோட வாழ்க்க அவனுக்கு புடிச்ச போல இருக்கட்டும்னு, ஆனா நீ வேற ஒருத்தன முடிச்சிட்டு போனதுமே உன் மேல எந்த விருப்பமும் எனக்கு இல்ல புரிஞ்சதா?

மௌனமாய் வாய் மூடி அழுதாள் சர்மி.

“உம்மா இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். நாங்க போறோம்..” இங்கிருந்தால் இன்னும் சுடு சொற்கள் தன் மனைவியை பழியாக்கும் என்பதை உணர்ந்த அதீக், அங்கிருந்த புறப்பட முனைகையில்,

கணவனின் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சர்மி.. ஏதோ ஒரு நினைப்போடு “மாமி” என்றாள்..

“மாமி.. நீங்க எவ்வளவு கோவப் பட்டாலும் உங்க மேல எனக்கு இருக்குற பாசம் எப்பவும் குறையாது. எங்க வீட்டவங்க செஞ்ச தப்புக்கு நான் தண்டனய அனுபவிச்சிட்டு ஈரன். கட்டின புருஷன் கூடவே இருந்தாலும், அவரோட பெமிலின்னு சொல்ல எனக்குத் தான் யாருமில்ல.. இந்த விஷயத்துல உங்க மகன் எந்த தப்பும் இல்ல. என் கூட இருக்குற கோவத்த அவர்மேல திணிக்காதிங்க பிளீஸ். நான் ஒதுங்கி இருக்கன். ஆனா உம்மான்னு சொல்லி இந்த வீட்டுக்கு வர உங்க மகனுக்கு மட்டும் சரி வாய்ப்பு கொடுங்க. பிளீஸ்” கண்ணீர் வழிந்தோட பேசினாள் சர்மி.

“சர்மி போதும் வா போகலாம், இப்படி மன்றாட நீயும் தப்பு பண்ணல்ல. எப்ப சரி ஒருநாளக்கி அவங்களாவே புரிஞ்சி வருவாங்க. அப்போ இந்த மகனோ, மருமகளோ தவறு செய்யல்லன்னு புரியும். வா வா போகலாம்.” மனைவியை பலவந்தமாக அழைத்துக் கொண்டு அதீக் திரும்பிப் போக, வாய் மூடியிருந்தாள் அவன் தாய் வாஹிதா.

*************

உண்மையில் சர்மி சொல்வது போல் வாஹிதாவின் கோவத்துக்கு நியாயம் இருக்கின்றது தான். ஆனால் உண்மையில் தப்பு செய்தவள் சர்மியில்லையே…!

இந்த சர்மி அதீக் உறவு இன்று நேற்று வந்ததல்ல, இப்போ கணவன் மனைவியாக இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோராய் இருந்தாலும் இதன் பின்புலம் நிறைய சம்பவங்கள் ஒழிந்திருக்கின்றன.

ஆம்! அதீக் கண்ட அழகு தேவதை தான் சர்மி. கண்டதும் காதல் என்று தொடர்ந்த இவ்வுறவுக்கு வராத சலனங்களில்லை. சர்மியின் உள்ளம் வெந்து போகுமளவுக்கு அவள் கண்ட இன்னல்கள் அதீக் என்ற உறவை அவளுக்கு காட்டியிருக்கவே கூடாது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

தன் மனைவி தன் தாயுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அதீகின் ஆசையாக இருந்தாலும், இந்தத் திடீர் பயணம் வெற்றியளிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கவில்லை. “யா அல்லாஹ்! என் உம்மா சர்மிய ஏத்துக்கனும், அவளுக்கு…

தன் மனைவி தன் தாயுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அதீகின் ஆசையாக இருந்தாலும், இந்தத் திடீர் பயணம் வெற்றியளிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கவில்லை. “யா அல்லாஹ்! என் உம்மா சர்மிய ஏத்துக்கனும், அவளுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *