சருகான சட்டங்கள்

பிணந்திண்ணிக் கழுகுகளின் கைகளிலே அகப்பட்ட சோசலிச சட்டங்கள் சாய் மரமாய் இன்று சரிந்தது சருகுகளாய் சட்டம் தான் சரிந்ததென்று சிந்திய கண்ணீர் இன்று பிஞ்சவன் கருகியது கண்டு இரத்தமாய் மாறியது சீரழிந்த சட்டங்கள் சீர்தூக்க யாருமில்லை முடங்கிப் போன மூடர் மனதை முறியடிக்க ஆளுமில்லை ஜனநாயக பெயரை வைத்து நடக்குதிங்கே நாட்டியங்கள் சட்டங்கள் சாவடித்து சரசமாய் புரியுதிங்கே மனித குரல் உயரும் முன்னே மக்களாட்சி வீழ்ந்ததின்றே மனித நேயம் துளிர்க்கு முன்னே மனித குணம் மறித்தின்றே நீளுமா … Read more

மாற்றம் தந்த காலம்

“நானும் எத்துன தடவை தான் கேக்குறது வொன்ட் கொபி ” எனும் தன் மகளது அலறல் சப்தத்திற்கு ஏற்ப பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் தாய் அஸ்மா. “இந்தாங்க மகள் கோப்பி” எனும் தன் தாயின் கருணையை பொருட்படுத்தாமல், “வர வர சொல்றது ஒன்னுமே வெளங்கமாடிக்கி. என்னட தலையெழுத்து இந்த வீட்டுல நம்ம பிறக்கனும்டு எழுதியிருக்கு சே.” எனும் தனது நிலையை கடிந்து கொள்ளும் தன் இளவரசியின் வார்த்தைகளால் சுக்கு நூறாகிப் போனது அன்னை அஸ்மாவின் மனது. “ஏன் … Read more

வீரத் தழும்புகளுடன் பதினாறு பூர்த்தி

உயிர்களை காவு கொள்ள உனக்கொர் ஊகம் வந்ததோ? எம் உடன் பிறப்புக்களை கொன்று நீயும உன் கோரப் பசியை தீர்த்து கொண்டாயோ? காலம் அழியா பெயர் பெறவா? நீ கண்ணீர் எமக்கு பரிசளித்தாய்? உன் கோரப் புத்தி கொண்டு நீயும் – எம் உறக்கத்தை பறித்துக் கொண்டாய்! அழியாத வீரன் என்று பெயரெடுத்து நீயும் சென்றாய் அழியாத பல வடுக்கள் கொண்டு – இவ் உலகையே முடக்கி விட்டாய்! உயிர்களை குடித்து உடமைகளை அழித்து உன் வீரத்தை … Read more

முதுமை எனும் முதிர்வில்

மழலையை மாற்றி இளமையை ஊட்டி இளைப்பாற ஓய்வு கேட்கும் இதமான பருவமது முதுமை பல தடைகள் கடந்து மழலையையும் தன் தோலில் சுமந்து தன் மறைவிற்காய் முதுகினை வளைத்து தள்ளாடும் நரம்புகளை நிமிர்த்த-ஓர் கோல் தேடும் பருவமது முதுமை மீளமுடியா யுகங்களை கடந்து மீளத்திரும்பா பல நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஓர் தரிசு நிலமாய் மிளிருகின்ற பருவமது முதுமை சிற்றலை சிதறல்களில் சிதறி ஓடும் சிறுவர் கண்டு நெட்டலையாய் நோக்குகின்ற நேறிய பருவமது முதுமை அனுபவங்கள் அலை … Read more

மாற்றம் கொண்டால்.

இனிமையான வார்த்தைகள் இதயக் கீறல்களை இறக்க வைக்கும் போது. கடல் அலையின் சிதறல்கள் கருப்புப் பாறைகளை மண்ணாக்கும் போது. சூரியனின் ஒளி வீச்சுக்கள் மண்ணை முட்டி முளைத்து மரமாக்கும் போது. மிருக குணங்களின் நடத்தைக்காய் நீயும் மனம் உடைந்து போவதேனோ? ஐந்தறிவுல்ல ஆந்தையே ஒளியில் கண் இன்றி வானில் உலாவ. மனித மனமே நீ மதிகெட்டார் வார்த்தைக்காய் மனமுடைந்து முடங்குவதேனோ? மாறுதல் கொண்டு மதியினை வென்று மனதிலே மன உறுதியை கொண்டு மறு பிறவி எடுத்து வா. … Read more

காலத்தின் கோலம்

நானிலமும் கவி பாடும் – என் நா கூட நலம் வேண்டும் நல் மனம் கொண்ட நம் தலைவனுக்கு நாற்பத்தெட்டாம் பிறந்த தினமே! வடுவாய் இருந்த எம் வலிகளை வாசமுள்ள பூக்களாய் புது மணம் பரப்பச் செய்து பூங்காவனமாக்க நீ புதைகுழியிலும் பாடு பட்டாய்! விதி வலியது காலம் செய்த கோலத்தால் உன் கை இரண்டும் விலங்கிடவே எம் கண்கள் இரண்டும் குளமாகி கலங்கி பல இரவுகள் நாமும் கையோந்தினோம்! கருகித் தான் விறகும் தீயாகும் போது … Read more

தளராத மனங்களே

வாழ்வெனும் பாதையில் சிலந்தி வலை போல் பல சிக்கல்கள் உனை சிறைப்பிடித்தாலும் சிதறாத உன் எண்ணங்கள் சிந்தாத பல வெற்றிக்கு சக்தியாய் உனக்கமையும்! நல்லெண்ணம் கொண்ட உன் பயணத்தில் பதறாத பல சிந்தைகளால் உன் எண்ணம் சூழ்ந்தால் பக்குவமான பல பாதைகள் உன் பக்கம் வந்து பாதாளம் வரை உன் வெற்றிக் கம்பத்தை ஊன்றும்! தளராத மனங்களே! தாழ்வு மனப்பான்மையை தாழ்த்தி விடுங்கள்! உயர்வான எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள்! மறவாத பல வெற்றிக்கு நீ மன்னனாக வேண்டுமெனில்! Shima … Read more

புன்னகை

துயரங்கள் என்றும் நம் வாழ்வில் தூரமுமில்லை! மனநிறைவு என்பது நம் வாழ்வில் நண்பனுமில்லை மனித மனதின் மாறுபட்ட பக்கங்கள் இவை இரண்டும் பக்குவமாய் நீ வாழு பண்போடு நீ பேசு புன்னகையே கை கொடுக்கும் உன் மனநிறைவிற்கு மாத்திரையாய் Shima Harees

என்னை வீழ்த்திய வேஷங்கள்

நீ கூறியது ஒன்றும் கதையல்ல என்னை ஊமையாக்க விதைத்த விதைகள் நீ பழகியது ஒன்றும் பாசமல்ல என்னை வீழ்த்திய வேஷங்கள் நீ எடுத்தவை ஒன்றும் மாற்றமல்ல என்னை கலங்கடித்த ஏமாற்றங்கள் உன் மௌனம் ஒன்றும் விடையல்ல என் வினாக்களின் மொத்த ரணங்கள் உன் புன்னகை ஒன்றும் வெற்றியல்ல என்னை கொல்ல வைக்கும் கத்திகள் உன் வார்த்தைகள் ஒன்றும் விதியல்ல என்னை கொன்று விட்ட சதிகள் உன்னால் நான் மாற்றினேன் என் விதிகளை உன்னை வீழ்த்த அல்ல உன் … Read more

%d bloggers like this: