போகப்போறது கடலோட மயானம் பெர்முடா மந்திர குழிக்கு.

  • 14

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 15】

“இந்த பொண்ணு தான் சேர் அன்னிக்கி மேல் மாடிக்கு வந்தது. ஏதோ பந்து வந்து விழுந்ததா சொன்னா. அப்பவே சொல்லலாம் என்று நினைத்தேன். ரெயான் சேர் தான் பாவம் தெரியாம பண்ணிட்டா போனா போகட்டும் என்னு மன்னிச்சு விட்டாரு” என்றான் அன்று ஐரிஸுக்கு அடுத்தவன்.

மேலே ஏறி வந்ததும் அவள்,

“என்ன சார்? நீங்க எல்லோரும் இங்க நிக்குறீங்க? நாங்க பார்த்ததை நீங்க பார்த்தால் ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க.” என்றாள்.

அங்கு அவளை தவிர வேறு யாருக்கும் அவள் என்ன சொல்ல போகிறாள் என்று தெரியாது.

“நாங்க நீச்சல் விளையாட்டுக்கு தண்ணியில் குதித்து சுழியோடி போனப்போ என்னாச்சின்னு தெரியுமா?”

என்று கேள்விக்குறி போட்டு மூச்சு விட்டாள்.

“ஒரு பெரிய சுறாமீன் வந்து கூண்டை உடைக்க முயற்சி பண்ணிச்சு. அதோட கடுமையான முயற்சியால கூண்டு திறந்து உள்ளே இருந்த இன்னொரு சுறா தப்பிச்சு போனதை நாங்க எங்க கண்ணால பார்த்தோம்.” என்றாள் ஐரிஸ். இவர்களும் அவளுக்கு துணையாக,

“ஆமா சேர். அது ரொம்ப பெரிய சுறா!” என்றார்கள்.

“அப்படின்னா அந்த பெரிய சுறாமீன் மோதியதால் தான் கூண்டு திறந்ததா? நீங்க அப்போ திறக்கலியா?” என்று கேட்டான் சுபிரீயண்ட் வால்ட்டர்.

“என்ன நாங்களா? நாங்க எதுக்காக இதை செய்யணும். அந்த அரிதான மீன்களை பாதுகாக்க தானே அவற்றை கூண்டில் வைத்து பராமரிக்குறீங்க. அப்படி இருக்க எங்களுக்கு என்ன வந்தது.” என்று லாஜிக்காக பேசினாள் ஐரிஸ்.

அதை ஒருவாறாக ஏற்று கொண்டு அவர்கள் அனைவரும் மேலே செல்ல யுவான் ஐரிஸை திரும்பி பார்த்தான். கையால் வேலை கச்சிதமாக முடிந்தது. என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டு லேசாக சிரித்து கொண்டே பை காட்டினாள் யுவானுக்கு.

***************

டேஞ்சர் வூட் கப்பலில் இருந்து கொண்டு தப்பிப்பதற்கு வழி அறியாமல் தவித்து கொண்டிருந்தனர் மாரியாவும் நிகலஸும்.

“ஏதோ பண்ண போறதா சொன்னியே என்னன்னு எனக்கும் தான் சொல்லேன்.” என்றார் நிக்கலஸ்.

“என்னோட அப்பா டோரடோ தீவு பற்றி நிறையவே எனக்கு சொல்லி இருக்காரு. ஆனா அது சரியா எங்க இருக்குனு மட்டும் என்கிட்ட சொல்லல. ஆனா ஒரு விஷயம் எனக்கு தெரியும். நாம செத்தாலும் பரவால்ல நம்ம பொண்ணை காப்பாற்றி ஆகணும்.” என்றாள் மாரியா.

“இப்போ என்ன தான் பண்ண போறெ? அந்த கொடூரன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவான். அவனை எப்படி சமாளிப்பது?” என்று கேட்டான் நிக்கலஸ்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே கேப்டன் குக் தன் நம்பிக்கைக்குரிய அடியான் பிலிப்புடன் அவ்விடத்திற்கு வந்தான்.

“உங்களுக்கு நான் கொடுத்த கெடு முடிஞ்சி போச்சு. சொல்லுங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?” என்று கேட்டான்.

“நாங்க உண்மை எல்லாம் சொல்லிர்றோம். ஆனா நீ நீ எங்களுக்கு ஒரு வாக்கு தரணும்.” என்றாள் மாரியா.

“வாவ் இது இதுக்காக தான் காத்துகிட்டு இருந்தேன். எங்க இருக்கு சொல்லு? சொல்லு.”

“அது அது. நட்சத்திரங்களை வைத்து கொண்டு தான் வழி சொல்ல முடியும். சூரியன் மறைந்ததும் இந்த பயணத்தை தொடரலாம். இப்போதைக்கு நங்கூரத்தை இறக்குங்க.” என்றாள் மாரியா.

அவளை அப்படியே நம்பிவிட்ட குக் பிலிப்பை பார்த்து

“சொன்னது புரிஞ்சதில்லை. போ போய் நம்மாளுங்களை நங்கூரத்தை இறக்க சொல்லு.” என்றான். அவனும் ஓடோடி சென்றான்.

“ஆனா ஒரு விஷயம். நாங்க உனக்கு உதவ ஒத்துகிட்டதால நீ எங்களையும் எங்க பொண்ணையும் விட்டுடனும்.” என்றாள்.

“இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. அப்படியே பண்ணிட்டா போச்சு. ஆனா என்னை ஏமாத்தலாம் என்னு நினைச்சீங்க. ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன்.” என்று விட்டு புறப்பட்டான்.

“என்ன பண்ணி வெச்சிருக்க. தெரியாத இடத்துக்கு எப்படி வழி காட்ட போறெ.” என்று குழப்பத்துடன் கேட்டான் நிக்கலஸ்.

“அவன் போகப்போறது டோரடோ தீவுக்கு இல்லீங்க. கடலோட மயானம் பெர்முடா மந்திர குழிக்கு.” என்றாள் மாரியா.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 15】 “இந்த பொண்ணு தான் சேர் அன்னிக்கி மேல் மாடிக்கு வந்தது. ஏதோ பந்து வந்து விழுந்ததா சொன்னா. அப்பவே சொல்லலாம் என்று நினைத்தேன்.…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 15】 “இந்த பொண்ணு தான் சேர் அன்னிக்கி மேல் மாடிக்கு வந்தது. ஏதோ பந்து வந்து விழுந்ததா சொன்னா. அப்பவே சொல்லலாம் என்று நினைத்தேன்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *