உறவுகள்

  • 15

பல கிளைகளை பரப்பி நிழல் தரும் மரம்
பல உணர்வுகளால் உருவான மரம்
வெயில் மழை பாராது நிலைத்து நிற்கும் மரம்
வேரில் இருந்து நுனி வரை பயன்தரும் மரம்

வண்ண மலர்களையும் சுவையான
கனி வகைகளையும் தரும் மரம்.
சிற்றெறும்புக்கு மட்டும் அல்ல
சிறகு விரித்து பறக்கும்
பறவைகளுக்கும் அடைக்கலமான மரம்.

அது என்ன மரமென்று தெரியுமா?
அது தான் உறவுகள் எனும் உன்னத மரம்!

சில காலநிலை மாற்றங்களால்
கிளைக்கு சொந்தமான பல இலைகள்
நிழத்தில் விழுந்து கிடக்கிறது.
அவை பலரது காலுக்கு இரையாகி
மிதிபட்டு அவதிப்பட்டு கேட்பார்
எவருமின்றி அனாதரவானது.

உறவுகளை உதறித் தள்ளிவிட்டு
உணர்வுகளை ஊமையாக்கி
வாழ நினைப்பது சரியா?
இங்கு மிதிபடும் இலை
நாமாக கூட இருக்கலாம்!
உறவுகளை மதித்து வாழ்ந்தால்
யாருடைய உணர்வுகளும்
வீணாக மிதிபட தேவையில்லை!!

உறவுகள் உணர்வுகளின் மரம்
உயிருடன் கலந்த ஒரு வரம்!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

பல கிளைகளை பரப்பி நிழல் தரும் மரம் பல உணர்வுகளால் உருவான மரம் வெயில் மழை பாராது நிலைத்து நிற்கும் மரம் வேரில் இருந்து நுனி வரை பயன்தரும் மரம் வண்ண மலர்களையும் சுவையான…

பல கிளைகளை பரப்பி நிழல் தரும் மரம் பல உணர்வுகளால் உருவான மரம் வெயில் மழை பாராது நிலைத்து நிற்கும் மரம் வேரில் இருந்து நுனி வரை பயன்தரும் மரம் வண்ண மலர்களையும் சுவையான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *