உடைந்த மனக்கண்ணாடி

உன் வேடம் தாங்கல்களை உண்மையாய் கேட்டேன் அதை எனக்கு வேஷமாய் தந்தாய் அதை சுட்டி உண்மையாய் இரு என்றேன் மீண்டும் என்னை ஏமாற்றினாய் என் அன்பும் அழுகையும் வெறும் இழுத்து பிடிப்பாய் உனக்கு உணர்த்தினாலும் இனி உன் அழைப்பு என் காதில் கேட்காது உன் பேச்சில் கலப்படம் போதும் உன் செயலில் மறைப்பும் போதும் மீண்டும் உன் பொய் உன்னை அழைக்க கூடும் மீண்டும் நீ போக கூடும் மீண்டும் என்னிடம் மறைக்க கூடும் மீண்டும் என்னிடம் … Read moreஉடைந்த மனக்கண்ணாடி

உணர்ந்து கொள்ளும் ஆணுக்கும் உணராத ஆணுக்கும் சமர்ப்பணம்

சிறு குழந்தை 10 மாடி கட்டிடத்தில் இருந்து நான் சூப்பர் மென் மாறி பறக்க போறன் வாப்பா, இல்லை மகள் என்று கள்ளம் அற்ற சிரிப்போடு பேச்சு, இல்லை நான் பறந்து தான் ஆவன், கொஞ்சம் கனத்த குரலில் இல்லை மகள் அது சரி இல்லை, இல்லை வாப்பா என்று ஓடி போகிறாள் பறப்பதற்கு, தந்தைக்கு மூளை நரம்பு வெடிப்பதை போல ஆத்திரத்தில் ஒரு அடி போட்டார், வாப்பா இல்ல நான் இனி செய்ய மாட்டன். என்று … Read moreஉணர்ந்து கொள்ளும் ஆணுக்கும் உணராத ஆணுக்கும் சமர்ப்பணம்

மனைவியின் போராட்டம்

அவனிடத்தில் நான் கேட்பதெல்லாம் நகை, பட்டு, பணம் அல்ல. பொய் கலக்காத உறவு மட்டுமே, ஒரு பொய் அவன் சொல்லுகையில் அதை தாங்கொன்னா என் மனம் புலம்புகின்றது. மாறாக நான் இழுத்து பிடிப்பதாய் அர்த்தம் அல்ல ஏன் எனில் என் நம்பிக்கையும் உண்மையும் அவனாக இருந்ததால் தான் அவனா? என்னிடம் பொய் சொன்னான் என அவன் அன்புக்கு மட்டும் இடம் கொடுத்த உள்ளத்துக்கு பொய் சொன்னான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இது திமிர் என்றால் என்னளவில் யாரும் … Read moreமனைவியின் போராட்டம்

காரணம்தான் காரணமாக உள்ளது

காரணம் இன்றி சிரிப்பதற்கு இடம் கொடுக்கின்றது உள்ளம் அழுவதற்கு ஏனோ காரணம் கேட்கிறது உத்தரவாதத்திற்காய் போலும் காரணம் இன்றி நேசிக்க கற்றுத்தந்த உள்ளம் வெறுப்பதற்கு காரணம் இல்லை என கற்றுத்தர மறந்துவிட்டது புரிவதற்கு காரணம் கேட்காத உள்ளம் பிச்சையாய் பிரிவதற்கு காரணம் கேட்கின்றது பிடிப்பதற்கு காரணம் இல்லை என்றது நடிப்பதற்கு காரணத்தை தானாய் உருவாக்கி கொண்டது எத்தனை நாட்கள் தான் பொய்யான உறவுகள் வேடம் போட முடியும்? மழை நீரில் சாயம் கலைதல் வாஸ்தபம் தானே   … Read moreகாரணம்தான் காரணமாக உள்ளது

அவள்களுக்குள்  அவள் ஒருவிதம்

அவள் அப்படித்தான் இல்லை அவள் அப்படி இல்லை அவள் அவள்களுக்குள் ஒரு விதம் அவள் எப்படி என்று அறிவது எப்படி. குறும்புகளும் அவளிடம் தஞ்சம் கோர கோபங்களும் அவளிடம் தஞ்சம் இரத்தத்தை பாலாக்கும் பாசமும் அவளிடம் தஞ்சம் துரோகியை மன்னிக்கும் தயாளக் குணமும் அவளிடம் தஞ்சம் எதிரியை அழிக்கும் வீரமும் அவளிடம் தஞ்சம் ஆணினம் தாங்கா பிரசவ வலி அவளிடம் தஞ்சம் கேட்க விரும்பா கேள்விகளும் சொல்லத் தயங்கும் பதில்களும் அவளிடம் தஞ்சம் வார்த்தைகளில் அன்பை மெல்லினமாய் … Read moreஅவள்களுக்குள்  அவள் ஒருவிதம்

இதுவும் புத்தகம் தான்

படிக்க படிக்க சுவாரஸ்யமான சில பக்கங்கள் படிக்காமல் மூடி விட தோன்றும் சில பக்கங்கள் கண்ணீர் மல்கும் சில பக்கங்கள். கடைசி பக்க நிதர்சனம் என்ன என தேடும் சில பக்கங்கள். இவ்வளவு தானா என ஏங்கும் சில பக்கங்கள் இவ்வளவு தான் போதும் என்ற சில பக்கங்கள் முடியவில்லையே என நொறுங்கும் சில பக்கங்கள் முடிந்து விட்டதே இன்னும் தாமதிக்காதா என சில பக்கங்கள். கிழித்து எறியும் சில பக்கங்கள் தானாய் தொலைந்து போன சில … Read moreஇதுவும் புத்தகம் தான்

என் கண்களின் இமைகளுக்குள்.

செல்கின்றேன் பயணம் அது நான் மட்டும் தனியாக அமைதியை தேடி நகர்கின்றேன், இரைச்சலின்றி அழகாய் ஓடும் நதியருகே, யாரோ எனக்காய் கட்டுவித்தது போலும் குடிசை ஒன்று. முடிவு செய்தேன், என்னிருப்பிடம் இதுவென, அடைந்தேன் ஒரு ஆறுதல் இளம் காற்று என்னைத் தழுவுகையிலே. சட்டென்று திமிர்த்துப் போனேன், இறையோனின் அருள் போல, சமாதானத்துக்காயும் எனக்காயும் என் தோளில் ஒரு வெண்புறா, என்னை யாரும் அழைக்க வேண்டாம். நான் என் இருப்பிடம் அடைந்து விட்டேன். எனக்கோர் சேதி சொல்வதெனில், என் … Read moreஎன் கண்களின் இமைகளுக்குள்.

மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று வந்தேன்

இருட்டு சூழ ஒன்னும் விளங்க வில்லை. நேரத்திற்கு சாப்பாடு வகை வகையான சத்துக்கள் ஒரு வழியாக வந்து கொண்டிருந்தது. கண் திறக்க முடியவில்லை. பழகி விட்டேன், கொஞ்சம் நிறை கூடினேன். இடைவெளி விட்டு தந்தது ஏதோ ஒரு வகை மெத்தை போல இருந்தது. ஏதோ சின்ன சின்ன சத்தங்கள் காதில் விழ, கால் வலித்தது போலும் எனக்கு எட்டி உதைத்தேன். அல்லாஹ் நான் இப்படி உதைத்து இருப்பேன் என்று எனக்கு தெரியாது. யாரோ ஒருத்தி அழு குரல். … Read moreமீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று வந்தேன்

மாறிப்போனன் உன் வருகை கண்டு

பிறை கண்டு நோற்ற நீயே மெது மெதுவாய் என்னைக் கடந்து செல்கின்றாய் தூக்கம் கொண்டேன் காலைச் சூரியன் என் நெற்றி சுட மாறிப்போனேன் இவை மறந்து போனேன் ரமழானே உன் வருகை கண்டு கூடும் குறையும் ஈமான் நீ என்னோடு இருக்கையில் கூடியது மட்டுமே இருள் சூழ அடி வானில் அவன் அடியாரைத் தேட துள்ளி எழும்பி தஹஜத் தொழுதேன் கண்ணீர்க் கடல் வற்றவில்லையே அருளாளன் நினைவில் இருக்கயில் தேம்பித் தேம்பி அழுதேன் முன் செய்த அறிந்த … Read moreமாறிப்போனன் உன் வருகை கண்டு

இப்படிக்கு ரமழான்

உனக்காய் வந்தேன் உன் வாசல் மிகுந்து வரவேற்றாய் பூரித்து போனேன் நாட்கள் நகருகின்றது உன்னை விட்டும் நான் விடை பெற நான் நகரும் நாட்கள் உன் பாவ அழிவுக்கே மனமுவந்து என்னை கடைசி வரை ஏற்றுக்கொள் என் தவணை முடிய மூன்றாக என்னை பங்கிட்டு முதல் பத்தாய் உன்னை விட்டுப் போகிறேன் ஆனால் நீயோ முதல் நாளன்று என்னை வரவேற்றது போல் இல்லை இப்போது உன் வரவேற்பு மங்கியது ஏனோ பழகப் பழகப் பாலும் புளிக்கும் நானும் … Read moreஇப்படிக்கு ரமழான்

நல்லெண்ணம்

நாம் ஒவ்வொருவரும் செய்யும் மிகப்பெரிய தெரியாத தவறு ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்து நமக்குள் வைத்துக் கொண்டு இரட்டை வேடம் பூண்டு பழகுவது தான். ஆனால் எங்களின் பார்வையில் நல்லவராக தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு பார்வையில் கெட்டவராகவும் அல்லது வேறு ஒரு வகையிலும் எங்களிடம் கெட்டவராக தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு வகையிலும் பார்க்க கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். ஏன் எனில் வெளித்தோற்றத்தை பார்க்கும் எம்மை போல அல்லாஹ் … Read moreநல்லெண்ணம்

நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்

முன் இருந்த சமூகத்துக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்களுக்கும் நோன்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏன் என்றால் எங்களுடைய உள்ளத்தில் தக்வா வரவேண்டும் என்பதற்க்காக அதாவது பாவங்களை விட்டு நப்ஸை கட்டுப் படுத்திக் தக்வாவுடன் நாம் இருக்க அல்லாஹ் இந்த நோன்பைக் கடமையாக்கி இருக்கிறான். ஒரு மனிதன் பாவம் செய்ய இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். நப்ஸ் அடுத்தது ஷைத்தான். ஆனால் இந்த ரமழான் மாதம் ஷைத்தான் விலங்கிடபட்ட மாதம் ஆகும். தொழச் … Read moreநோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்

கைசேதம் உண்டோ?

கஷ்டங்கள் இல்லா மனிதங்கள் உண்டோ உண்டெனின் அவை ஜடங்கள் தானோ.. நடப்பவை கையில் இல்லை என அறிந்தும் நீ நடக்கும் மாயைக்கு – இறை மறந்து தூற்றுவது ஏனோ.. திரும்பாது வெறுமென என்று ஏந்தி நில் இருகரம் திரும்புவது உனக்கானது என்று ஏற்று நில் மறுகணம்.. ஆறுதலாய் படைத்தவன் வழி காட்டி நிற்க நேர்வழி தெரிந்தும் – மாற்று வழி தேடுவது மடமையே.. இதைவிட கைசேதம் உண்டோ என்ன?? நிந்தவூர் றிசாமா SEUSL

இருப்பதனால்

ஏமாற்றங்கள் வலிக்க வில்லை இழப்புக்கள் பழகிப்போனதால் பிரிவுகள் வலிக்க வில்லை தனிமைகள் துணை இருப்பதால் கண்ணீர் கடல் வற்றவில்லை சோதனைகள் ஊற்றெடுப்பதால் நிஜங்கள் வலிக்க வில்லை கற்பனைகள் வேரூன்றியதால் சாகசங்கள் புதுமை இல்லை போலிகள் மலிந்து இருப்பதனால் இரவுகள் உவர்க்க வில்லை கனவுகளில் மட்டும் நினைப்பவை நடப்பதனால் சாகவில்லை உள்ளம் இறைவன் கூட இருக்கிறான் என்ற நம்பிக்கை நிரம்பி இருப்பதனால் நிந்தவூர் றிசாமா SEUSL

உனக்காய் ஒரு மடல் – கொரோனா

அகோரம் கொண்டு நீ வந்த நோக்கம் என்ன வெற்றுக் கண் பாரா உயிரே நீ உயிரை உயிர் தின்பது என்ன வகை நியாயம் மூச்சடைச்சு விடும் மூச்சு இமைக்கும் முன் நின்றது – என்ன ஆர்வம் மனித உயிர் கொல்லியே உனக்கு யார் செய்த சதி நீ யார் போட்ட வலை நீ சிக்கி தவிக்கின்றது பெரிசு முதல் சிறிசு வரை உன் மரண சிறைக்குள் தாங்க முடியவில்லை உன் கோரம் ஏற்க முடியவில்லை உன் பாரம் … Read moreஉனக்காய் ஒரு மடல் – கொரோனா

எனக்காய் நீ வேண்டும் .

ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும் என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான பங்காளனாய் நீ வேண்டும் என் ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் மாற்றுக் கருத்தின்றி என் மனதார, மகிழ்வாய் உதவிடும் மாண்பாளனாய் நீ வேண்டும் மண வாழ்க்கை உன்னோடு தான் தொடங்க இருக்கின்றது தெரியாது உன் விருப்பு வெறுப்பு நான் மெதுவாய் உன்னை புரியும் … Read moreஎனக்காய் நீ வேண்டும் .

கோரோனாவும் தடையில்லை

நம் தினத்தில் நமக்காய் சாதிக்க நினைப்பவனுக்கு தடைகள் ஒரு சதி அல்ல.. கவி பாடும் கவிஞர்களுக்கு காவியால் கவி கொண்டு போற்றுகின்றேன் ஊட்டுகின்றேன் சுவை ஊட்டுகின்றேன் எழுத சாதியால் செத்து மடிந்த கூட்டம் இன்று சாதி இன்றி நேயம் கொண்டு எழும் இந்த நாட்களில், கவிஞர் நமக்கு ஒரு தினமாம் கொண்டாட தடை இல்லை கோரோனாவும் தடை இல்லை எம் கவி மிளிர. எழுதுங்கள் கோரோனாவுலக்கு, தன் உயிர் கொடுத்து உயிர் காக்க மருந்து தேடும் வைத்தியர்களை … Read moreகோரோனாவும் தடையில்லை

ஆறுதலாய் சில வார்த்தைகள்

பேனாவின் எழுத்தில் ஆறுதலாய் பேனாக்காரி இவளிடம் இருந்து ஒரு சில. எனக்கொரு நாள் உனக்கொரு நாள் இங்கு இல்லை. எல்லோருக்கும் என்று தான் உதயம் கொள்கின்றது ஒவ்வொரு நாளும் நீ துணிந்து எதிர் கொள்கையில் உன் எதிர்பார்ப்பு கலையாது என்னாளும் நேற்று இன்றாகாது. இன்று நாளையாகாது. கடந்த நாளில் இருந்து அனுபவம் எடு நாளை நீ கடக்க இருக்கும் நாளுக்கு கடக்கும் கஷ்டத்தை இஷ்ட பட்டு ஏற்றால் கஷ்டமும் வசம் கொள்ளும் உன் மனதுக்கு இன்பம் கடைசி … Read moreஆறுதலாய் சில வார்த்தைகள்

அவர்

நான் முதல் அறிமுகப்பட்டது அவரிடம் தான் என்னை நெஞ்சோடு அனைத்திட என் அன்னை…. நான் பார்க்கா உலகம் நீ பார்க்க வேண்டும் என தோளில் சுமந்தவர் அவர்…. நான் எட்டி நடக்கையில் தடக்கிட, பதறிய என் தாயிடத்தில் கை நீட்டி நான் விழுந்தும் வலிக்காமல் இருக்க அவர் போட்ட கம்பளம் கட்டியவர் அவர்…. தாவி ஓடும் வயதில் ஆசையாய் மிதி வண்டி ஓடக் கேட்டு, மிதி வண்டி பழகி, தவறி விழுந்த என் அழுகை கண்டு நான் … Read moreஅவர்

மீண்டும் அந்த குரலுக்காய்……

உலகமே ஆழ்ந்து துயிலும் இரவின் மௌனத்தை செவிமடுத்திருக்கிறாயா? நான் செவிமடுத்திருக்கிறேன் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டு இருக்கும் இரவு வேளையில் காற்றின் ஓலத்திற்குள் புதைந்திருக்கும் பெருந்துயரை உணர்ந்திருக்கிறாயா? ஆம் நான் உணர்ந்திருக்கின்றேன் அந்த காற்றோடு ஒரு அமைதிக்குரல் என்னவோ மனசு அமைதி பெற்றது அந்த குரலினால் காலந்தோறும் நியாயமே அற்ற முறையில் விதியால் பிணிக்கப் பட்டிருக்கும் மௌனமாக விசும்பிக் கொண்டிருக்கும் பெண்களின் பெருமூச்சுக்களை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது போலும் அந்த குரல் இங்கிதமாய் என் காதில் உரையாற்றியது இவ்வாறு … Read moreமீண்டும் அந்த குரலுக்காய்……

கனக்கும் மனதுக்கு

கஷ்டம் கண்டு வாடிய உனக்கு இஷ்டம் கொண்டு உன் மனதோடு உரையாட கவிதையால் இவள்….. யாருக்கும் இல்லை என்று எண்ணி கவலை அணிந்து கொண்டாய் போலும்… உன் அறைக்கு சூரியன் வெளிச்சம் கொடுக்க நீ உன் ஜன்னல் திரை நீக்குவதை போல் உன் கஷ்ட திரை நீக்குவதில் உள்ளது உன் மனதின் வெளிச்சம்… கரைக்கும் சக்தியும் கரையும் சக்தியும் நீருக்கு உண்டு கரையும் நீரல்லாது கரைக்கும் நீராய் இரு… விழுவது அவமானம் என்று நினைத்து வெற்றியை இழக்கிறாய் … Read moreகனக்கும் மனதுக்கு

எது ஊனம்?

ஊனம் எது என்று உணர்வாய் சொல்ல இது என் உணர்வலைகள் நான் கண்ட ஊனத்தின் சில அடிப்படையில் எத்தனிக்கின்றேன் நீ உலகைக் கண்கொண்டு அதில் இயற்கையை ரசிக்கிறாய் பல முகமூடி மனிதம் கண்டு அவன் செயல் தூற்றி புறம் புகழ்கிறாய் வலதால் கொடுத்து பின் அதை இடதாய் அழைக்கின்றாய் தியேட்டர் காட்சிக்கு நடைபோட்டு டிக்கெட் எடுக்கிறாய் ஆனால் மார்க்க சபைக்கு உன் கால்களை முடக்குகின்றாய் நாலு பேரை புறம் பேச நாவுக்கு நேரம் எடுத்து திக்ருக்கு விடை … Read moreஎது ஊனம்?

பொறுமைக்காரி

விதி மீதான பேராசையால்…. காலங்கள் கடந்து போகின்றது அவளும் காலத்தைகடந்து கொண்டு தான் இருக்கிறாள் விதி ஒரு நாள் மாறும் என்று.. கறுப்பு இராக்கள் தினமும் விழி தொடுத்து தன் நெற்றியை நிலம் பதித்து விதி மாற நிலை நிற்கிறாள் அவள்…. வரண்ட பாலை மழை கண்டு சிரிப்பதை போல் அவள் நெற்றி நிலம் சிரித்ததே விழி மழையில்… நடப்பதெல்லாம் நடக்கட்டும் நடக்கட்டும் என்று பொறுமை செய்து அவள் நெஞ்சில் இறுக்கி வைத்த சுமைகளை கட்டவிழ்த்து விட்ட … Read moreபொறுமைக்காரி

Select your currency
LKR Sri Lankan rupee