இலட்சிய குடும்பத்தை நோக்கி தொடர் – 05

  • 17

சிற்பங்களைச் செதுக்கும் இடம் தாயின் கருவறை

குழந்தைப்பேறு என்பது பலர் கூறுவதைப் போல் ஓர் இறையருள் என்பதில் சந்தேகமில்லை. “குழந்தைகளும், செல்வங்களும் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள்” என அல்குர்ஆன் கூறுகிறது.

எனவே அருளாகவும் இறைமார்க்கத்திலே சுவாசிக்கும் அலங்கார குழந்தைகளாக வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பும் கடமையுமாகும்.

இந்த உணர்வானது ஒரு குழந்தை கறுவுற்றதிலிருந்து ஆரம்பமாகிறது. எனவே அந்த அருள் சிற்பங்களைச் செதுக்க கருவைச் சுமக்கும் தாயும் காலமெல்லாம் சுமக்க தயாராகும் தந்தையும் திட்டமிட வேண்டும்.

அந்த வகையில் இன்றைய கால பிள்ளைகள் படிப்பறிவற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவும், சீர்கெட்டவர்களாகவும், இருப்பதற்கு ஏன் காரணம் என்று பார்த்தால் கருவறையிலே சரியான முறையில் சிற்பத்தை செதுக்குவதற்கான வேலையைச் செய்யாமையே.

கருவறையில் இருக்கும் போதே அதை முறையாக செயற்படுத்தியிருந்தால் இன்று பிள்ளைகள் பெற்றோர்களுக்கு சோதனைகளாக மாறியிருக்கமாட்டார்கள்.

ஒரு தாய் தனது குழந்தையை கருவில் சுமக்கும் போதே அந்த பிள்ளையை பயிற்றுவிப்பதற்கான அடித்தளத்தையிட வேண்டும். கல்விச்சூழல், பண்பாடுமிக்க குடும்பச் சூழல், பெற்றோர்களின் ஆளுமைகள் அனைத்தும் கருவில் இருக்கும் சிசுவிற்கும் தாக்கம் செலுத்தும். இது இல்லாமல் தான்தோன்றித்தனமாக ஏனோதானோ என்று அர்த்தமில்லாத வளர்ப்பு அதாள பாதாளத்திற்குள் இழுத்துச் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

தாயின் கருவறையில் சிசு வளர்கையில் கழியாட்டங்கள், ஆபாசங்கள், தகாத தொடர்புகள், கணவன் மனைவி சண்டை, கோபதாபங்கள் போன்ற விடயங்களின் சாயல் கருவில் உள்ள பிள்ளைக்கு தாக்கும். இதில் கணவனுக்கும் பங்கு உள்ளதை மறந்து விடக்கூடாது.

ஒரு நகைச்சுவைக் கதையொன்றை நாம் அறிந்திருப்போம் ஆனால் அது சொல்லும் கருத்து ஒவ்வொரு கணவன், மனைவிக்கும் ஒரு படிப்பினையைச் சுட்டிக்காட்டுகிறது.

ஓர் அறிஞரிடம் ஒரு பெண் தன் மகனின் சேட்டைகள், குறும்புளை மிகவும் கவலையுடன் முறையிட்டாள். தன் மகனின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் வித்தியாசப்படுவதையும், வீதியில் வருபவர் போபவருடனான நடத்தைகளில் மாற்றம் ஏற்படுவதையும் முறையிட்டாள். திடீரென அறிஞர் “அவரின் கற்பகால நாட்களின் நிலைமைகளையும், நடத்தைகளையும் விசாரித்தார். அந்தப் பெண்ணைப் பார்க்கும் போதே அவளின் குணாதிசயம் வெளிப்பட்டாலும் அந்த பெண் நான் சினிமாவோ நாடகங்களோ பார்ப்பதில்லை.

என் கணவர் ரெஸ்லின் மட்டும் பார்ப்பார் என்றாள். உடனே அந்த அறிஞருக்கு சிரிப்பு வந்து விட்டது. பின் அந்த பெண்ணிடம் கூறிய விடயம் தான் இங்கு கவனிக்கவேண்டியது. தந்தை பார்த்த ரெஸ்லின் விளையாட்டே தற்போது உங்கள் மகனுக்கு கடத்தப்பட்டு பல்வேறு கோணங்களில் உங்கள் குழந்தை அதை வெளிப்படுத்துகிறது என்றார்.

எனவே கருவில் பிள்ளை உருவானதும் உங்கள் பிள்ளை எதிர்க்காலத்தில் எவ்வாறு மிளிரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அந்த செயற்பாடுகளை பெற்றோர்களாகிய நீங்கள் செய்ய வேண்டும்.

கணவனும், மனைவியும் குர்ஆனிய சூழலை ஏற்படுத்தல், கற்றல், கற்பித்தல் விடயங்களில் ஒருவருக்கொருவர் ஈடுபடல், அதேபோல் அன்பு, பாசம் நல்ல குணங்களை வெளிப்படுத்தல் இவ்வாறு நல்ல தொடர்புகள், விடயங்களில் ஈடுபடுவதின் மூலம் நமது குழந்தைகளையும் அதனை ஒத்த பிள்ளைகளாகப் பார்க்கலாம்.

அதேபோல் பிள்ளையைப் பெற்றெடுத்ததும் கடமை முடிந்து விட்டது என்று மட்டும் நினைக்கக் கூடாது பருவ வயது வரை சரியான வழிகாட்டல்கள், பயிற்றுவிப்புக்கள் முறையாக கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளே அடுத்த கட்டங்களாக அடியெடுத்து வைக்கும் பாடசாலை, நண்பர்கள் வட்டம், சமூக சூழலில் சிதைந்து செல்லாமல் சிற்பங்களாக மிளிரும் என்பதில் எந்த ஐயமுமில்லை..

இவ்வாறு இருந்தால் உங்கள் சிற்பங்கள் நாளை சரித்திரமாக உருவெடுக்கும். இன்ஷா அல்லாஹ்..

முற்றும்.

Faslan Hashim

சிற்பங்களைச் செதுக்கும் இடம் தாயின் கருவறை குழந்தைப்பேறு என்பது பலர் கூறுவதைப் போல் ஓர் இறையருள் என்பதில் சந்தேகமில்லை. “குழந்தைகளும், செல்வங்களும் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள்” என அல்குர்ஆன் கூறுகிறது. எனவே அருளாகவும்…

சிற்பங்களைச் செதுக்கும் இடம் தாயின் கருவறை குழந்தைப்பேறு என்பது பலர் கூறுவதைப் போல் ஓர் இறையருள் என்பதில் சந்தேகமில்லை. “குழந்தைகளும், செல்வங்களும் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள்” என அல்குர்ஆன் கூறுகிறது. எனவே அருளாகவும்…