நீ ஓர் அடையாளம்

உயிர்களை துச்சமென உதறும் யுத்த பூமியில் கல்வி எனும் ஆயுதம் ஏந்தி அமைதி காண விரும்பும் பெண்ணே! எழுதுகோல் கொண்டு தேசத்தின் தலையெழுத்தை மாற்ற துணிந்திருக்கும் வீரத்தாய் நீ! உபயோகமில்லாத சில்லறை காரணங்களுக்காக கல்வியை கைவிடும் அத்தனை மங்கையர்களுக்கும் உன் செயல் ஓர் எடுத்துக்காட்டு! அழிந்து போகும் அத்தனையும் அழியாச் செல்வம் கல்வியைத் தவிர என்பதை மீண்டும் ஒருமுறை உன்னில் உணர்ந்து கொண்டோம்! நீ கல்வியோடு பயணித்தால் பணம் புகழ் பதவி பட்டம் அத்தனையும் உன்னோடு பயணிக்கும்! […]

தேடல்

மனிதநேயம் தேடியொரு நெடுந்தொலைவுப் பயணம். மயங்கி வீழ்வேனோ என்றெண்ணும் தருணம். வன்முறை வளைக்குள் அன்பு நெறி சுருக்கிக் கொண்ட மனிதர்கள். கரம் கொடு எனும் பலவீனப் பார்வைக்கிங்கே இல்லை அங்கீகாரம் உதவி எனும் எண்ணத்தில் ஏதிங்கே உபகாரம். கனிவொழுகப் பார்க்கும் பார்வை கலைந்து போன தேசம் இது தனித் தனி தீவென்றே புதைந்து போன தேசம் காட்டுக்குள் காணுகின்ற காருண்யம் வீட்டுக்குள் காணவில்லை மனிதநேயம். கழுத்தறுத்து குழி பறித்து வீழ்த்திடவே மனிதர் இன்று தோள்கொடுத்து கரம் கொடுக்கும் […]

கறுப்பு ஜூன்

2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை சொத்துக்கள் எரிக்கப்பட்டு சொந்தங்கள் தூரமாக்கப்பட்டு சொல்லணா துயருற்ற சொந்தங்களுக்கு சமர்ப்பணம் பிரிவினை பேரினவாதமாகி பிரச்சினைகளாக உருவெடுத்த பிரிவினைவாதமாம் கவலையாக கரைந்திட்ட கறையாக படிந்திட்ட கறுப்பு ஜூனுக்கு அகவை ஆறாம் மனங்கள் மாற மனிதம் தழைக்க மாநிலம் செழிக்க மண்ணில் சமாதானம் நிலைக்க மறையணும் வேற்றுமை மலரணும் ஒற்றுமை… ASMA MASAHIM […]

கிழக்கு மண் ஈன்றெடுத்த முத்து

இளமையிலே தாயை இழந்தும் திருமறையை நெஞ்சில் சுமந்த ஹாபிழும் நீரே! அகராதி புரட்டாமலே ஹாபிழ் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்தவரும் நீரே! உயர்கல்வியை உயர் இடத்தில் கற்று பொறியியலாளராக பூமியில் பவனி வந்த நேரிய உழைப்பாளியும் நீரே! ஊழல் மோசடி இன்றி பலருக்கு உத்தியோகம் தேடிக்கொடுத்த கொடை உத்தமரும் நீரே! சொந்த செலவிலே சேவை மன்றம் அமைத்து எம் துயர் துடைத்த கரங்களும் நீரே! பணத்தால் வாக்கை பெற்றவர்களுக்கு மத்தியில், உம் குணத்தால் இடம் பிடித்து மானிடர் […]

அபலையின் உள்ளம்

பிறப்பு முதல் இறப்பு வரை வேலிக்குள்ளேயே வெதும்புகின்ற அபலை உள்ளங்கள் பல வேலி தாண்டி வெளியேற வழி தேடும் அந்த அபலை உள்ளங்களில் ஒன்று இது ஏவல்கள் இல்லாத அடக்குமுறைகள் இல்லாத அதிகாரம் இல்லாத வரையறைகள் இல்லாத குற்றம் காணாத குறை பிடிக்காத புதிய உலகு வேண்டும் அங்கே நான் மட்டுமே இருக்க வேண்டும் எனக்கான சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு காற்றில் கூட அங்கே கலப்படம் இருக்க கூடாது பாரம்பரியம் பண்பாடு பழக்க வழக்கம் என […]

மாற்றம்

விஞ்ஞானத்தை வானோங்க வளர்த்து அறியாமையை கிள்ளி எறிந்து தற்பெருமை அடித்துக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை கண்ணுக்கு தெரியா வைரசு வந்து பல லட்சம் உயிர்களை காவு கொண்டு உலகையே வீட்டினுல் அடக்கி மனிதர்களின் தற்பெருமையை கிள்ளி எறிந்து விட்டது. இன, மத,பேதமென பிளவுண்ட மனித சமூகத்தை ஒரு கொடியில் பூத்த பூ போல் ஒற்றுமையாய் மாற்றியதே தான தர்மம் செய்யவென மனதாலே எண்ணி கூட பார்க்காத பலரையும் வலது கொடுத்தது இடது அறியா வண்ணம் கொடுக்க தூண்டியதே. […]

பலவீனர்களல்ல பாலஸ்தீனியர்கள்

மனித குலத்தில் மனிதமேயற்ற யூத குலமே! துறத்தியடிக்கப்பட்ட உன் சமூகத்தின் துன்பத்தை போக்கிய பலஸ்தீனியர் எமக்கா? இரண்டகம் செய்கின்றாய் நன்றி கெட்டவர்களே! இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்ரேல் என்று நாமமிட்டு தலைமுறையாய் நாங்கள் வாழ்ந்த தேசத்தையே உலக வரைபடத்தில் இருந்தே அகற்றினாய்! சொந்த மண்ணிலே எங்களை அகதிகளாக்குகின்றாய் அடிமைகளாக்குகின்றாய் அடித்து துன்புறுத்துகின்றாய்! உன் வஞ்சத்தை தீர்க்க சின்னஞ் சிறு பாலகர்கள் பெண்கள் என்றும் பாராது ஏவுகனைகளால் மாய்க்கின்றாய்! எங்கள் தேசத்துக்கும் எம் எதிர்கால தலைமுறைக்கும் இன்னும் […]

ஹைக்கூ

சேற்றில் முளைத்த செந்தாமரையல்ல தம் உறவுகளின் குருதியில் முளைக்கின்றன பலஸ்தீன் றோஜாக்கள் யா நப்ஸ் என்னைக் காப்பாற்று மஹ்ஷரை நினைவூட்டுகிறது கொரோனா துப்பாக்கி முனையிலும் தப்பாமல் ஈமான் பலஸ்தீன் பூமியில் பிறர் முன்னேற்றம் உன்னில் தடுமாற்றம் பொறாமை வரண்ட நிலத்தில் மழைத்துளி ரசிக்க முடியவில்லை விதவையின் கண்ணீர் உனக்காய் சிரிக்கிறேன் எனக்காய் அழுகிறாய் இடம் மாறியது இதயம் மக்கொனையூராள்

யார் ஏமாற்றுக்காரன்?

வாழ்க்கைப் பாதையில் ஓடின என் கால்கள் கால்கள் ஏமாற்றிட தடுமாறி விழுந்தேன். பரிதாபமாய் சமூகம் என்னை நோக்கிடக் கண்டே தூக்கி விடும் என கை கேட்டேன். தரையில் வீழ்ந்த என்னை புகைப்படமாக்கி பிரபலம் கண்டது ஏமாற்றிய சமூகம். தன் கையே உதவியென என் கை ஊன்றி நானே எழுந்தேன் ஓட ஆரம்பித்தேன். முன்னால் ஓடிய மனித தடங்கள் பார்த்தேன் மலைப்பாய் இருந்தது ஏமாந்து நின்றேன். ஜெயிப்பது கடினம் மனது சொன்னது. யாரை ஜெயிக்க ஏமாற்றுக்காரர்களையா? ஒரு குரல் […]

சொடுக்குப் பாச்சிய மச்சான்

பெண்:- தேங்காயும் காஞ்சிருக்கு தென்னமரம் ஒசந்திருக்கு என் மனசு நெறஞ்சிருக்கு – மச்சான் ஒன்னத்தான் நெனச்சிருக்கு தேங்கா பிக்க வந்தீங்க என் மனசத் தொட்டீங்க எட்டாத ஒசரம் பார்க்க என்னைய வெச்சீங்க ஆறு மாசம் முன்னாடி கதச்ச கத நெனவிருக்கா ? வருவீங்களா ஊட்டுப் பக்கம் இந்த மாசம் தேங்கா பிக்க நுகதூவ தோப்புக்குள்ள தேங்கா நீ புடுங்கையில ஓல, பால, பன்னாட பொறுக்கத்தான் நானும் வாரன் ஆண்:- பாசமுள்ள ஏன்ட மச்சி தேங்காய நானும் பிச்சி […]

விடை பெறும் ரமழானே ஈத் முபாரக்

ரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய பத்து மஹ்பிரத்துடைய பத்து நரகவிடுதலையுடைய பத்து என முப்பத்தாய் முத்து முத்தாய் எமக்கு நன்மைகளை அள்ளித் தர வந்த ரமழானே! இன்றுடன் எமது அமல்களை ஏற்க மறுத்து விடை பெறுவதும் ஏனோ! நீ பண்படுத்தி விட்டாய் எங்கள் அனைவரினதும் உள்ளங்களை! இனி மீண்டும் அடுத்த ஆண்டும் முஹமன் செய்து […]

ஷவ்வால் கீற்றிலே

மூ பத்துக்களை முத்தாய்ப்பாய் – சுமந்து மானிடர் கறையகற்ற வந்த மகத்தான மாதமே! இருமதிக்கிடையில் முழு மதியாய் – உதித்து பாவங்களை சுட்டெரித்து நன்மைகளை சம்பாதித்து மனிதனை புனிதனாக்கி மறையை ஏந்தவைத்து மறுமையில் ஏற்றம் பெற மாந்தர் நலம் பெற நவ திங்களாய் வந்துதித்த ரமழானே – நீ விடைபெறும் தருணமதில் வல்லோனளித்த பரிசு ஷவ்வால் கீற்றிலே ஈகைத் திருநாளாம் இன்பப் பெருநாளை உவகையுடன் வரவேற்றிடுவோம்! ஈத் முபாரக் ASMA MASAHIM PANADURA SEUSL

அன்பு எதனாலானது

….. அன்பு மெழுகாலானதா ஆன்மா இப்படி உருகுகின்றதே அன்பு பூக்களால் ஆனதா ஒரு நேசத்தின் வருகையில் இதழ்விரிகிறதே அன்பு காற்றால் ஆனதா ஒரு தலை வருடலில் சோகம் தீர்க்கிறதே அன்பு மழையால் ஆனதா பாசத்துளிகளில் இதயம் குளிர்கிறதே அன்பு தீயால் ஆனதா ப்ரியம் பிரிகையில் சுடுகின்றதே அன்பு மரங்களால் ஆனதா ஆறுதல் வார்த்தைகள் நிழலாகின்றதே அன்பு ஒளியால் ஆனதா தனிமை இருள் கலைக்கின்றதே அன்பு வானவில்லால் ஆனதா நொடிப்பொழுது தரிசனமும் அழகாகின்றதே அன்பு தேனால் ஆனாதா முரண்பாடுகளுக்குப் […]

மீண்டும் வருவாயே ரமழான்

அல்குர்ஆன் மணம் கமழ் வாசம் ஈருலகும் மங்காப் புகழ் வீசும் அழுது தொழுது கண்ணீரால் பேசும் அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம் பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள் வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள் இதயத்தில் இல்லை வீண் பழுதுகள் விதைத்தோம் மறுமைக்காய் நன்மை விழுதுகள் ஸதகாவில் மனம் குளிர்ந்தோம் ஸக்காத்தில் தூய்மை அடைந்தோம் தவ்பாவால் உள்ளம் மீண்டோம் தக்வாவுடன் வாழ்வைத் தொடர்வோம் பண்ணிய பாவம் பறந்திடச் செய்தாயே புண்ணியம் வாழ்வில் நிலைத்திட வைத்தாயே கண்ணியம் ஆன்மாவில் […]

வல்லோனே வல்லமை தாராயோ

இரக்கமற்ற அரக்கர்களினால் உறக்கம் தொலையும் இரவுகளில் வருத்தமான நினைவுகளால் இறுகிப் போனதா உன் இதயம் துப்பாக்கி வேட்டுக்களுடன் துர்ப்பாக்கிய உன் நிலைமை விடியாத இரவுகளுடன் முடியாமல் தொடர்கதையா கல்லே ஆயுதமாய் கரமேந்தும் வாலிபரின் கல்பின் வீரமது கரை யெட்டும் நாளெதுவோ இரும்புத் தொப்பியும் இறுகப்பற்றிய துப்பாக்கியுமாய் இஸ்ரேலியப் படைகளின் இரத்தவேட்டை தொடர்கின்றதோ சூரியோதயம் தொலைத்து உன் தேசம் சூன்யமான மாயமென்ன சூழ்ச்சிகள் பல செய்தே இஸ்ரேல் சூடிக்கொண்ட நாமம் என்ன ரோஜாவின் அழகு கொண்ட மென்சிட்டு ராஜாக்கள் […]

துயில் தொலைக்கும் விழிகள்

துயில் தொலைத்த இரவுகள் துக்கம் தொக்கியவை தூங்கிப் போன கவலைகளை துடைத்து எழுப்பாட்டிவிடும் பல்லியின் சத்தம் பாம்பின் சத்தமாக படபடக்கும் நெஞ்சை பாடம் போட்டுக் காட்ட வல்லவை ஏக்கங்கள் விகாரமடைந்து ஏதிர்பார்ப்புக்கள் பூச்சியமாகி எங்கோ கேட்கும் ஒலியொன்று எம் காதில்தான் ரீங்காரமிடும் மரண பயமொன்று ஒட்டிக்கொள்ள மனதில் வடுக்கள் சுட்டுக் கொல்ல மனதோ இழப்பின் உச்சத்தில் மலையேறிவிடும் கொக்கொரக்கோ சத்தத்தில் காலை விடியலை பார்த்துவிட்டு குப்புறப்படுக்காமல் இனியேனும் கண்விழித்தாக வேண்டும் காரிருள் இரவில் கவனமாய் எடுத்தேன் முடிவு […]

பயங்கரவாதம்

பண்டிகைக்கான பலஸ்தீன பாலகர்களின் பலவண்ண பட்டாசுகளல்ல பாலகர்களையும் பரிதவிக்கும் பனுயிஸ்ரவேலர்களின் பயங்கரவாதம் Ibnuasad

பலஸ்தீன் பலம் பெற

உலக மேடையில் உதாசீனமாய் உதரப்பட்டுள்ள உன்னத தேசம் அதிகாரம் எனும் அகழியில் அடக்கப்பட்டுள்ளன அப்பாவி உயிர்கள் பள்ளி சென்று பாடம் படிக்க வேண்டிய பாலகர்கள் பாதைகளில் இரத்தம் சிந்துகின்றனர் சொந்த மண்ணுக்காக இம்மையின் இன்பங்களை துறந்து இறைப்பாதையில் இயங்குகின்றனர் இளைஞர்கள் ஓய்வான காலத்தில் ஓடித்திரிகின்றனர் முதியோர்கள் அழுகுரலும் ஓலங்களும் ஒப்பாரிகளும் ஒன்றித்து விட்டன ஒளிமயமான தேசமதிலே இன்று பிறந்து நாளை மரணிக்கும் மண்ணாய் மாறிவிட்டது மகத்தான தேசம் சொந்த மண்ணிலே சோதிக்கப்படுகின்றனர் சொர்க்கத்து சொந்தங்கள் வந்தாரை வரவேற்றதற்காக […]

அவள் தான் என் “அம்மா”

உயிர் கொடுத்து உருவம் கொடுத்து ஊணும் கொடுத்து தன் உடம்பில் இடமும் கொடுத்து பூமியிலும் கொடுத்தாய்! எனக்கு உணவாக தாய்பாலும் கொடுத்து அழுகின்ற பொழுதெல்லாம் தாலாட்டும் கொடுத்து சிரிக்கின்ற பொழுது முத்தங்கள் கொடுத்தாய்! படிப்படியாக வளரும் பொழுது ஆனந்தத்தைக் கொடுத்து பருவம் அடையும் பொழுது அரவணைப்பையும் கொடுத்து மனம் தடுமாறும் பொழுது ஆதரவும் கொடுத்தாய்! வளர்ந்து வரும் பொழுது தவிப்பைக் கொடுத்து இளமையில், தனிமையைக் கொடுத்து உன்னை பிரியும் பொழுது கண்ணீரைக் கொடுத்து அடிக்கடி கண் எதிரே […]

ஆதலால் தாமதம் வேண்டாம்

இனியும் தாமதம் வேண்டாம் ஏமாற்றி உழைத்தவற்றை திருப்பிக் கொடுக்கவும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்த்தப்பட்டோரிடம் மண்டியிடவும் பொய் ஓப்பனையைத் தோலுரித்து விடவும் முள்ளாகக் குத்திய வார்த்தைகளுக்கு மருந்தாகிடவும் இழைத்த அநீதிகளுக்கு நீதி வழங்கிடவும் பதுக்கிய செல்வங்களுக்கு விடுதலை கொடுத்திடவும் வீணாக்கிய காலங்களுக்காய் வருந்தியழுதிடவும் இனியும் தாமதம் வேண்டாம் உத்தமராக வாழாவிட்டாலும் பரவாயில்லை பாவியாக மரணித்து விடாதிருப்போம் மூச்சு சிறைப்பட்டுப் போகும் நொடி யாரறிவர் ஆதலால் இனியும் தாமதம் வேண்டாம் மக்கொனையூராள்.

கைதியா நீ இன்று

வானம் கறுக்கயிலே குஞ்சுகளைப் காவல்காக்கும் பட்சியை போல் ஓலைக் குடிசையிலே உண்பதற்கு ஏதுமின்றி உறக்கம் கெட்டுக் கிடந்த எம் ஏழைத் தாய்மார்கள் ஏங்கி கேட்ட பிரார்த்தனைக்கு இறைவன் தந்த எம் இனிய மகனே உன் வெற்றி நடைக்கு ஆயிரம் தடைகள் வந்த போதிலும் உனக்கு உதவியாய் இருந்த ஓர் ஆயுதம் உன் ஏழை தாய்மார்கள் உனக்காய் வடித்த கண்ணீர் துளிகளே இன்று அக் கண்ணீர் துளிகளோ உன் நிலை கண்டு வீதியிலே உலா வருவதென்ன நமக்கான சோதனனையா? […]

தொழிலாளி

உலகம் உயர ஓயாது உழைப்பவன் தொழிலாளி விவசாயம் முதல் விண்வெளி வரை வியர்வை சிந்துபவன் தொழிலாளி குடும்ப வண்டி ஓட சக்கரமாக சுழல்பவன் தொழிலாளி தேசம் எழுந்திட ஏர் கொண்டு உழைப்பவன் தொழிலாளி உழைப்பையும் முயற்சியையும் மூலதனமாகக் கொண்டு முன்னேறுபவன் தொழிலாளி சம்பளப் பிரச்சனையும் வீதிப்போராட்டங்களும் விதியாகிவிட சலிக்காமல் உழைப்பவன் தொழிலாளி சுற்றி சுரண்டல்கள் தொடரும் தொல்லைகள் எதைக் கண்டும் தளராது உழைப்பவன் தொழிலாளி தொழிலாளிகள் ஒன்றுபட அன்று மாறுவான் முதலாளி நீர் இன்றி நிலையாத உலகைப்போல் […]

சொல்லு சொல்லாக

மாணவர்களுக்காய் செயலமர்வொன்று மதிப்புக்குரிய நிறுவனமொன்றால் இலவசமாக நடந்தேறியது அன்று இடைக்கிடை போய் பார்த்தேன் அழகிய அர்த்தமுள்ள உரைகள் அரங்கேறியது உணவில் விஷமாம் உடலுக்கு ஆபத்தாம் அடியோடு தடுத்து தோட்டங்கள் செய்வோமென்ற தொனிப் பொருளில் மூழ்கியிருந்தனர் தோட்டப் பாடசாலைக்கு வந்த தொண்டர்கள் கடையிலே வேண்டாம் கருப்பட்டிகூட கைபட உழைத்து சாப்பிடாதவிடத்து கலக்கும் நஞ்சு உடம்பில் கடுமையாய் சொன்னார்கள் கவனித்தனர் குழந்தைகள் கவனம் குவிந்தது என்னில் கவனிக்கவென டீ ஊற்ற முனைந்த கல்வித்தாகம் தீர்க்கும் சகஆசான்களிடமே டீ வேண்டாம் மாவு […]

சகோதரியே கலங்காதே!

ஹிஜாப் அணியும் அன்புச் சகோதரி! கலங்காதே! நிராசை அடையாதே! எஞ்சி இருக்கும் றமழானின் இரவின் பிந்திய பகுதியில் விழித்தெழு! – அது “என்னிடம் கேட்பவர்கள் யாரும் இல்லையா?” – என நம்மைப் படைத்தவன் நம்மை அழைக்கும் நேரம் அவனை அழை! அவனோடு பேசு! மனம்திறந்து பேசு! கண்ணீர் விட்டு மன்றாடு! அவன் ஆற்றல் மிக்கவன் நொண்டிக் கொசுவின் மூலம் அரசன் நும்ரூதைச் சாகடித்தவன் அபாபீல்கள் மூலம் ஆப்றாஹாவின் படையையே அழித்தொளித்தவன். உன் ஹிஜாபுக்காய் அவனிடம் மனுக்கொடு! இர்ஷாத் […]

ஏப்ரல் 21

இயற்கை எழில் உடன் நாற்பக்கமும் உவர் நீர் ஊற்றெடுக்க இன மத பேதமின்றி இணைந்து இருந்த அந்நேரம் அழகாய் விடிந்தது ஏப்ரல் 21 அதிகாலை அவலத்துடன் முடிந்தது அன்றைய மாலை பயங்கரவாதிகள் என்ற பட்டம் பெற்று பட்டப்பகலில் பதற வைத்தனர் இறை சந்னிதானத்தில் உயிர்த்த ஞாயிறு உயிர்களை உருகுலைத்தது உணர்வுகள் அற்ற ஒரு சிலரால் உவப்பாய் ஊர் சுற்ற வந்த உல்லாசப் பயணிகளின் உயிர் அற்ற உடல்கள் உணவகத்திலே உயிர்த்த ஞாயிறை உயர்பிக்க வந்த உறவுகள் உயிர் […]

Open chat
Need Help