காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 13

“சொல்லுங்க… என்கிட்ட இருந்து எதையோ மறைச்சி இருக்கீங்க… அது என்ன?” என்று கில்கமேஷ் கடும் கோபத்துடன் கேட்டான். “அது.. அது.. வந்து…” என ஜெனி தடுமாற “இப்போ சொல்லப்போறீங்களா இல்லியா?” என்று கத்தினான். அவள் பயத்துடன்,”சொல்லிர்றோம்.. சொல்லிர்றோம்.. முதலில் எங்களுக்காக இந்த ஆதாரத்தை கொண்டுவந்ததுக்கு நன்றி.. அடுத்தது நாங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம்.”என்று அவள் சொல்ல ஆர்தரும் மீராவும் சேர்ந்து “எங்களை மன்னிச்சிடுங்க.”என்றனர். மறுபடியும் ஜெனி பேசினாள். “இந்த விஷயத்தை நீங்க நம்புவீங்களோ இல்லையோ தெரியல்ல… […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 12

என்ன நினைத்தானோ தெரியவில்லை. கில்கமேஷ் வேகமாக காட்டுக்குள் நுழைந்தான். சட்டைப்பைக்குள் செல்போனை போட்டுவிட்டு எந்த இடத்தில் இருந்து திட்டம் போட்டார்களோ அங்கேயே சென்றான். ஆனால் அங்கு அவர்கள் யாரும் இல்லை என்றதும் அவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த போது அந்த குகை தெரிந்தது.  உள்ளே சென்ற போது முன்னரை போலவே மூவரும் கட்டிக்கிடந்தனர். அதோடு மயக்கத்தில் காணப்பட்டனர். என்ன நடந்து இருக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில் மூவரின் கட்டுக்களையும் அவிழ்த்து விட்டு […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 11

லாக்கரில் கையைவிட்டவள் அதை வெளியில் எடுக்கவில்லை. “இப்போ  உங்க பிரச்சினை தான் என்ன? அதான் அது உங்களோடது இல்லன்னு நல்லாவே தெரியுதே! ரெண்டுநாளைக்கு முன்னாடி இங்க வந்து போனை தொலைச்சது இவர்… இனி என்ன?” “அவசரப்படாதீங்க!  ரெண்டு நாளைக்கு முதல் என்னோட போன் காணாம போனது உண்மைதான். அதுவும்  இங்கே தான் தொலைஞ்சது. ஆனா அன்னிக்கு நான் இங்கே வரல.” “என்ன சொல்லுறீங்க?”என அந்த பெண் ஆச்சர்யமாக கேட்டாள். “என்ன விளையாடுறியா? நீ வராம உன்னோட போன் […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 10

உள்ளே சென்ற கில்கமேஷ் ஒவ்வொரு பொருளாக பார்க்க ஆரம்பித்தான். எல்லாமே புதுமையாக இருந்தது. பழங்காலத்து பொருட்கள் எல்லாமே கண்ணாடிப்பெட்டிகளிலுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சில உருக் நகரத்துக்கு சொந்தமான களிமண் தட்டுக்கள், மற்றும் பாத்திரங்கள்… அவற்றின் கீழ் எழுதப்பட்டிருந்தவற்றை அவனால் வாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஜெனிபர் அவனுக்கு பேசுவதற்கான பயிற்சியை மட்டுமே கொடுத்து இருந்தாள். அதனால் ஆங்கில மற்றும் தமிழில் இருந்த விபரக்குறிப்புக்களை அவனால் படிக்க முடியவில்லை. அசூர்பனிபாலின் அழிந்த நூலகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கில்கமேஷ் […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 09

மீரா அருகில் வந்தபோது தான் தெரிந்தது… அவள் ஒன்றும் பயத்தில் கத்திக்கொண்டு வரவில்லை. மோப்பம் பிடிப்பதற்காக போலீசார் கொண்டுவந்த இவர்களின் பைகளை விட்டுச்சென்றுள்ளார்கள். அதனை காட்டில் கண்டதும் கொண்ட ஆனந்தத்தில் தான் கத்திக்கொண்டு வந்தாள் என்பது. “உஃப்…. இங்க பார்த்தியா நான் என்ன கொண்டு வந்து இருக்கேன்னு.. நம்ம பேக்ஸ்… காட்டுக்குள்ள கிடந்தது…”என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் மீரா. “இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?…”என்றான் ஆர்தர். பையை திறந்து தன்னுடைய போனை எடுத்து மீரா “உன்னை ரொம்ப மிஸ் […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 08

மீராவும் ஆர்தரும் போலீசுக்கு முதலே ஆற்றோரத்தை அடைந்தனர். அங்கு ஜெனியும் கில்கமேஷ்ஷும் பேசிக்கொண்டிருக்க அவசர அவசரமாக மூச்சு வாங்க அவர்கள் முன்னாடி போய் நின்றனர். “ஜென்… ஜெனி… போலீஸ் காட்டுக்குள்ள வந்திருக்காங்க…. மோப்ப நாயையும் கூட்டிகிட்டு வந்து இருக்காங்க..” என ஆர்தர் சொல்ல ஜெனி பயத்தில் எழும்பிவிட்டாள். “என்ன சொல்றே… இப்போ என்ன பண்ணுறது….” “எப்படியும் அவங்க கொஞ்ச நேரத்தில் இந்த இடத்துக்கு வந்திடுவாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு நம்மள கண்டுபிடிக்க நம்ம பேக் எல்லாம் […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 07

விடிந்தது….. முதலில் விழித்து கொண்ட ஆர்தர் நீண்ட சோம்பல் முறிவுடன் சுற்றுமுற்றும் பார்த்தான்…. “ஆஹ்ஹ்…ஜெனி மீரா… எழும்புங்க… சீக்கிரம்”என அலறினான். “என்னாச்சு… ஏன் இப்படி கத்துறே?” என கேட்டுக்கொண்டே இருவரும் விழித்து கொண்டனர். ஆர்தர் இருவரிடமும் கில்கமேஷ் படுத்து கொண்டிருந்த மரத்தை காட்டினான். “என்ன????” “அவன்… எங்க… எங்க போய்ட்டான்…” என ஜெனியும் பதறிப்போனாள். “போச்சு போ… அவன் நம்மள ஏமாத்திட்டு ஓடிட்டான்….. எல்லாம் போச்சு.. இப்போ எப்படி இங்கிருந்து இறங்குறது…??” ஜெனிக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது.. […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 06

“இப்போ என்ன சொல்றது . உண்மையெல்லாம் சொன்னா இவரு என்ன ஆவாரு…? ஒரு வேளை கோபப்பட்டு நம்மள ஏதும் பண்ணிட்டா…”என மீரா இழுக்க “இல்ல இல்ல நாம அவருக்கு உண்மையான விஷயத்தை புரியவைப்போம். ஆனா இப்போ இல்ல. “என்ன சொல்ற ஜெனி!”என ஆர்தர் கேட்டான். “முதலில் நாம இந்த திருட்டு கேஸில் இருந்து வெளியே வரணும். அதுக்கு நமக்கு அந்த எவிடென்ஸ் வேணும்…” சோ… அதனால மியூசியத்துக்குள்ள போய் செல்போனை எடுக்கிற பொறுப்பை நாம கில்கமேஷ் கிட்ட […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 05

முதலில் அவனை பார்த்து மூவரும் பயந்து தான் போயினர். ஆனால் ஓட நினைக்கவில்லை. ஓடுவதற்கு தெம்பும் இருக்கவில்லை. எப்படியோ சில மனிதர்களை கண்டுவிட்ட திருப்தியில் அவர்களிடம் பேசுவதற்காக கில்கமேஷ் முன்னேறி வந்தான். “ஒஹ். ஒஹ். போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சி இப்படி காட்டுவாசி கிட்ட மாட்டிக்கிட்டோமே!”என ஆர்தர் புலம்பினான். “கிட்ட வராதே அங்கேயே நில்லு….”என்று மீரா ஒரு குச்சியை வைத்து அவனை விரட்ட பார்த்தாள். கில்கமேஷ்ஷும் சுமேரிய மொழியில் தான் எங்கு இருக்கிறேன் என்று இவர்களிடம் பேச […]

Read More

அடையாள அட்டை

“இதென்ன மகன் இஸ்லாமிய புக் நிறைய இருக்கு” “வாப்பா இதெல்லாம் தீவிரவாதத்தை போதிக்கிற புக் அல்ல. நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம். நாளைக்கு பொலிஸ் வந்த அவனுக்கே வாசிக்க கொடுக்குறன். இதுல ஏதும் தீவிரவாதம் இருக்க என பார்க்க” இது இஸ்லாமிய்ய கலாபீடத்தில் உயர்கல்வியை தொடர்ந்த அக்ரமின் மறு மொழி. “மகன் இதென்ன பழைய மோட்டர் பைக் இன்ஜின் எல்லாம் சேர்த்தி வைத்திருக்கு” “வப்பா நான் அதெல்லாம் போம்ப செய்ய ஐஸ் காரணுக்கு விக்கிறல்ல, நா ஏஜி […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 04

“அர்ரெஸ்ட் ஹேர்!” என்ற பெரிய சத்தத்தில் தான் குற்றவாளியாக்கப்படுவதை ஜெனிபரால் தாங்கி கொள்ள முடியவில்லை. கையும் களவுமாக பிடிப்பட்டதால் போன், ஆதாரம் என்று கத்தியது எல்லாம் போலீசாருக்கு ஏதோ தப்பிப்பதற்காக சொன்ன வெற்று வார்த்தகளாகவே தெரிந்தன. குற்றவாளிக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும், போலீசாரை அவர்களது கடமையை செய்யவிடாது தடுத்தார்கள் என்ற வகையிலும் மீராவும் ஆர்தரும் கூட விலங்கிடப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டனர். நல்லவேளை நாம தப்பித்தோம் என்கிற திருப்தியில் ப்ரொபெஸர் இருந்தாலும் தன்னைப்பற்றிய ஆதாரம் இருக்கும் […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 03

ப்ரொபெஸர் லாரன்ஸ் உள்ளே சென்று ஒவ்வொரு பொருளாக விளக்க ஆரம்பித்தார். என்னதான் அவர் விடயங்களை சொல்லித்தருவது போல நடித்தாலும் யார் கையில் ஆவது மோதிரம் தென் படுகிறதா என்பதை அவதானித்து கொண்டே இருந்தார். “இதுதான் மன்னர் நீரோவோட தலைக்கவசம்…. தனி பிளாட்டினத்தால செஞ்சது ..பல லட்சம் தேறும். இது ரோமின் பழங்கால பொக்கிஷம் கொலோசியம் கட்டுவதற்கு பயன்படுத்தி இருக்காங்க. இந்த சுத்தியல் தூய இரும்பால செஞ்சது. அவ்வளவு உறுதி.”என்கிறார். “அப்போது ஒருவன் சார் இதென்ன ?”என்று கேட்க […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 02

“இந்த மோதிரத்தை இதுக்கு முன்னாடி வேற எங்கயோ பார்த்து இருக்கேனே!” “என்னடி யோசிக்குறே?…ஆமா இதென்னெ ரிங் ஒன்னு?”என கேட்டாள் மீரா. “ப்ரொபெஸர் போகும் போது கீழே விழுந்திச்சி…”என்று சொன்னாள் ஜெனி. “எங்க காட்டு…”என்றவள் அதை வாங்கிப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள். “ஹேய் இது… இது  சிட்டி மியூசியத்துக்கு சொந்தமான பழங்கால மோதிரம். கிங் கில்கமேஷ் அவரோட பெஸ்ட் பிரண்ட் என்கிடுவுக்கு பரிசாக கொடுத்தது.” “என்னடி சொல்லுறே?” “உனக்கு நியாபகம் இல்லியா? போனவாட்டி நாம சிட்டி மியூசியம் போனபோது ப்ரொபெஸர் […]

Read More

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 01

அடர்ந்த காடு ஊழிப்பெருவெள்ளத்தில் இருந்து உயிர் தப்பிய மூதாதை நோவாவின் (உத்னாபிஷ் டிமின்) வழிகாட்டல்களை பின்பற்றி குகையில் தவமிருந்து உயிர் ரகசியத்தை அறிந்து கொண்டு 8000 வருடங்களின் பின்னர் வெளியேறுகிறான் கில்கமேஷ். தான் எவ்வளவு காலம் குகையில் தரித்து இருந்தான் என்பது அவனுக்கு தெரியாது. அது ஓரிரு வருடங்களாக இருக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான். தான் ஆட்சி செய்த நாட்டையும் மக்களையும் பார்க்கும் ஆவலுடனும். எதற்காக இப்படி ஒரு சரித்திர பயணத்தை மேற்கொண்டானோ அதன் பயனை அடையப்போகும் […]

Read More

விடியலை நோக்கி

வழமை போல் கடிகார முள் நேரம் நான்கை காட்டியது. அம்னா சுறுசுறுப்பாக எழுந்து தனது அன்றாட வேலைகளை முடித்தவளாய்¸ தந்தை வந்து அழைக்கும் வரை தனது பாடங்களை மீட்டினாள். தந்தை கதவு தட்டும் சத்தத்துக்கு விறைந்தவளாய் “வாப்பா¸ எத்தனை மணிக்கு ஹாஸ்பிடல் போற?” என்று அமைதியாக கேட்டாள். “இன்னும் கொஞ்சத்துல போவோம் மகள்¸ ரெடி ஆகுங்க நான் தேநீர் கொஞ்சம் ஊத்திக்கொண்டு வாறன் “என்று கூறிவிட்டு சமயலறைக்குள் நுழைந்தார் தந்தை. சிறிது நேரத்தில் தந்தை அழைக்கவே¸ அம்னாவும் […]

Read More

சிதைந்த கனவால் சரிந்ததோர் ஆலமரம் தொடர் 02

“உம்மா எனக்குப் பொண்ண புடிச்சீக்கி. ஒண்டும் கேக்க வாணம். பொண்ண மட்டும் எடுத்தாப் போதும்” இது ஆஸியாவின் மீது காதல்வயப்பட்ட மகனின் குரல். “நீங்க எந்த மகன் பேசிய??? ஒங்கட லெவல்க்கு ஒண்டும் இல்லாம பொண் எடுக்கேலுமா? எங்கட அடுத்தூட்டு மாமிட மகன் பெரிய பங்களா, கார், கோடிக்கணக்கான சல்லி எண்டு நெறய சீதனத்தோட பொண் எடுத்தீக்கான். அவன விட நீங்க எவளவு பெரிய ஜொப் செய்றீங்க…. ஒங்களுக்கும் நெறய சீதனத்தோட தான் பொண் எடுப்பேன்” என்று […]

Read More

சிதைந்த கனவால் சரிந்ததோர் ஆலமரம் தொடர் 01

மலர்கள் தம் மென்னிதழ்களை விரித்து மணம் பரப்பும் ரம்மியமான காலைப் பொழுதினிலே வானை ஆட்சி செய்து கொண்டிருந்த சூரியனின் இளங் கதிர்கள் யன்னலினூடாக அவள் கன்னத்தை முத்தமிட சிறு சோம்பலுடன் விழித்தெழுந்தாள். யன்னலூடாக எட்டிப் பார்த்தவள் குளிரின் உரசலினால் சற்று விலகிக் கொண்டாள். உடலைப் போலவே அவளது உள்ளமும் குளிர்ந்து கொண்டிருந்தது. இன்ப அலைகள் உளமெனும் கரையைத் தொட்டுச் சென்றன. ஆம் இன்று முதல் தடவையாக அவளைப் பெண் பார்க்க வருகின்றனர். இதுவே அவளது மகிழ்ச்சிக்கான அத்திவாரம். […]

Read More

ஓர் நேசத்தின் வலி

“சப்னா சப்னா எழும்புங்கோ” ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கு உடம்புக்கு என்ன சரியா?  என்று தன் தோழை பரிவோடு தட்டியெழுப்பிய தன் சகோதரி risla விடம் “ஒன்னுமில்ல தாத்தா இன்னைக்கு office ல வேலை over அதுதான் தலைவலியாக இருக்கு” என்று தன் சகோதரியை சமாதானப்படுத்திய shafna வால் தன் மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் தவித்தாள். அவளது மனம் பல்வேறுபட்ட சிந்தனையில் சுலன்று கொண்டிருந்தது. shafna சீதனம் எனும் கோரப்பிடியில் சிக்குண்டிருப்பவள் அன்பான சுபாவம், சுயநலமற்ற மனம், தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். ஆனால் யாரும் […]

Read More

சனிக்கிழமை ராத்தா

அது ஒரு வரட்சிக்காலம் மண்ணுக்கு அல்ல; அவனுக்கு….. வானில் உறங்கும் விண்மீனை அதிகம் அவன் ரசிப்பதுண்டு; அது போல் அவனும் ஒரு நாளாவது மிளிர வேண்டுமென்று… அவன் தன் கடந்த கால நினைவோடு நிலவாய் தேயலானான்… மெல்ல மெல்ல….. அவனுக்கு சுமாராக பண்ணிரெண்டு வயது இருக்கும். இந்த விசித்திர உலகை வியந்த படியாய் பார்க்கும் பட்சியாய் திரிந்த நேரம். மற்றவர்களது தேவை இவனுக்கோ ஆசையாய் தென்பட்டது. அவனது உலக புத்திக்கு கொஞ்சம் சிறகுகள் முளைக்காத காலமது. அப்பொழுது […]

Read More

பத்து நிமிடங்கள் முந்தி….

இன்றைய நாட்டு நடப்பை வட்ஸப் மூலம் அவதானித்துக் கொண்டிருந்த சலீம் நாட்டு நிலைமைகளையும் இனங்களுக்கிடையிலான பிரிவினையை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது பள்ளியில் “அல்லாஹு அக்பர்” என்று இஷா தொழுகைக்கான அதான் ஒலிக்கவே ஸ்மார்ட் போனை வைத்துவிட்டு பள்ளிகுச் செல்ல சலீம் ஆயத்தமாகினான். அதான் கூறி முடித்து சில நிமிடங்களுக்குள் இன்னொரு குரல் ஒலித்தது. “அஸ்ஸலாமு அலைக்கும் இன்று இஷா தொழுகைக்கு பின்னர் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறும் ஊர் ஜமாஅத்தினர் அனைவரும் கலந்துகொள்ளவும்” மனையாளிடம் சொல்லிவிட்டு சைக்கிளில் […]

Read More