திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 31

ராதா கல்லாய் நிற்க, சத்தம் கேட்டு வாணியும் ஹோலுக்கு வந்து சேர்ந்தாள். “என்னம்மா? என்ன நடக்குது இங்க?” வாணியின் வரவு கண்டு எல்லோரும் அமைதி காக்கவே, சுரேஷ் தான் வாயைத் திறந்தான். “அக்கா வந்தவங்களுக்கு உன்ன ரொம்பவே புடிச்சி இருக்காம்.. என்ன தம்பி சொல்ற?” அவளுக்கு எல்லாம் கனவு போல் இருந்தது. “ஆமாம் அக்கா, உன்னோட சேர்த்து என்னயும் புடிச்சிட்டு போல, மாப்புள பொடியனோட தங்கச்சிய எனக்கு கலியாணம் பண்ணிக்க சொல்லுறாங்க, எனக்கு இதில் டபல் ஓகே.. … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 31

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 30

“என்ன அப்பா அது அது அதுவந்து, அதுவந்து… சொல்லுங்கப்பா அவங்களுக்கு ஓகேயாமா? அது என்னன்டா.. ஐயோ சொல்லுங்கப்பா” சுரேஷ் தந்தையை அதட்ட, காதுகளை இருக மூடிக் கொண்டாள் வாணி.. “இந்த விஷயம் சரிப் போகாது டா.. ஏன் பா? எதுவும் கேக்காத சுரேஷ், எப்புடியும் சரிவரப் போறதில்ல.. அவங்க என்ன சொல்லுறாங்க, வாணிய விரும்பல்லயாமா? சுரேஷ் பிலீஸ் என்கிட்ட ஒன்னும் கேக்காத” மகனுக்கும் தந்தைக்குமிடையிலான உறையாடல் கேட்டு கதறி அழுதாள் வாணி. “நான் இப்புடியே இருந்துட்டு போறன் … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 30

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 29

நேரம் நகர சுரேஷ் வீட்டினரின் உள்ளங்கள் பதறிப் போயின. “மாப்புள வீட்டினர இன்னமும் காணோம், ஒரு வேள வர மாட்டாங்களோ…” உள்ளம் அங்கலாய்க்க இடைக்கிடை கடிகாரத்தை பார்த்தான் சுந்தர். “வந்துட்டாங்கப்பா” வீட்டு வாயிலிலேயே நின்றிருந்த சுரேஷ் தகவலோடு உள்ளே வர, வீட்டினர் சற்று உற்சாகமாயினர். “அவங்க வந்துட்டாங்க” வாணியின் அறைக்குள் தகவல் கடத்தப்பட தன்னை மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்து மெருகூட்டிக் கொண்டாள். “தாமதத்துக்கு மன்னிக்கனும், ரோட்டுல சரியான ட்ரபிக்” மாப்பிள்ளையின் அப்பா காரணத்தை சொல்லிக் கொண்டே … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 29

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 28

உனக்கு நான் முக்கியம்னா எங்க விஷயத்தப் பாரு, இல்லன்னா எங்க அப்பா அவ்வளவு காலம் என்ன வெச்சிக்க மாட்டாங்க. உன்ன பிடிக்கும்னு சம்மதம் வாங்க நான் எவ்வளவு எதிர்ப்புக்கள கடந்திருக்கன்னு உனக்கு தெரியாது சுரேஷ். இன்னும் என்ன கஷ்டத்துல போடாத. அப்படி இல்ல வசீ.. நான் என்ன சொல்ல வாரன்னா..” மறுமுனையில் அழைப்பு துண்டுக்கப் படுகின்றது.. என்ன செய்வதுன்று அறியாமல் குழம்பிப் போனான் சுரேஷ். தன்னவளுக்கு சாதகமாக பேச முடியாமலும், தன் தங்கையை விட்டுக் கொடுக்க முடியாமலும் … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 28

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 27

என்ன அக்கா ஒருமாதிரி இருக்க?” சுரேஷின் கேள்வி அவளின் அணைக்கட்டை உடைத்து விட தம்பியை பற்றிக் கொண்டு கதறி அழுதாள். என்ன அக்கா? என்ன ஆவிட்டு? இப்போ எதுக்கு அழுகுற? என்னால எல்லோருக்கும் தொல்லையா போயிட்டு தானே? ஏன்டீ அப்படி சொல்ற? நாங்க யாரும் கனவுல சரி அந்தமாதிரி நெனச்சில்ல, எதுக்கு இப்போ வீணா மனச போட்டு குழப்பிக் கொள்ற? உன் விஷயமும் நடக்கனுமே தம்பி.. இப்போ அதுக்கான அவசரம் இல்ல அக்கா, நீ கவலப் படாம … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 27

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 26

“தம்பி..” கத்திக் கொண்டு எழுந்தாள் வாணி. “புள்ள நல்லா தான் இருக்கு” வாணிக்கு குறுக்காய் சுந்தர் சொல்லிச் சிரிக்க அவள் வாயடைந்து போனாள். வாணி எதுவும் பேசாது அறைக்குள் செல்ல, வாணியின் பின்னால் ஓடினான் சுரேஷ். “ஹே என்னடி, உனக்கு அவளப் பிடிக்கல்லயா? சொல்லு என்கிட்ட ஏன் இத விஷயத்த ஆரம்பத்துலயே சொல்லல்ல, உனக்கு இப்போ நான் முக்கியமில்லாம போயிட்டன் தானே? அப்படி ஒன்னும் இல்லடி.. எனக்கு ஒரு புள்ளய புடிச்சிருக்குன்னு சொல்ல கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 26

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 25

அங்கிள் இது சுரேஷ்ட வீடு தானே? சுரேஷ் இருக்காறா? ஓம் நீங்க?? வசீகரான்னு சொல்லுங்க” எதுவும் அறியா சுந்தர் குழப்பிப் போனான். வாயிலில் ஓர் பெண் குரல் கேட்டு ராதாவும், வாணியும் சுந்தரின் பின்னால் வந்து நின்றார்கள். “யாரும்மா நீ என் பெயர் வசீகரா ஆன்ட்டீ” அனைவரையும் ஈர்க்கும் அழகான சிரிப்பு அவளை இன்னும் அழகு படுத்திக் காட்டியது. “நீங்க வாணி தானே? உங்களப் பத்தி சுரேஷ் அடிக்கடி சொல்லுவான். அடிக்கடியா? ஆமாம்” மீண்டும் அவள் இதழ் … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 25

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 24

தந்தையின் வார்த்தைகளில் இருந்த சுயநலமும், தப்பான காரியங்களும் சுரேஷை மேலும் வதைக்க, அப்போ என் அம்மாவ கொலை செஞ்ச படுபாவி நீங்க தானே?” ஆவேசமாய் கத்திக் கொண்டு எழுந்தான். “அப்படியெல்லாம் பேசாதடா, உங்க அம்மாவோட மரணத்துக்கு அப்புறம் இன்னக்கி வரயும் நான் நானாகவே இல்லடா. நான் செஞ்ச தப்புக்கு கடவுள் என்ன தண்டிச்சிட்டுத் தானிருக்கான். மனசுவிட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆவிட்டுட்டா.. என்ன செய்யப் போனாலும் உங்க அம்மா ஞாபகம் தான் வரும். எனக்கு எப்படி சொல்லன்னு … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 24

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 23

இந்த சூழ்நிலையில் தான் அன்று சுரேஷின் செவிகளில் அந்த பேரிடி வந்து விழுந்தது. ஆத்திரமும் ஆவேஷமும் மேலிட கத்திக் கதறினான். ஏன்ட அம்மா யாரு? நான் இந்த வீட்டு புள்ள இல்லயா.. சொல்லுங்க அப்பா? ஏன்ட அம்மா எங்க இருக்காங்க? “சுரேஷ்” ஆறுதலாய் அவனைப் பற்றினாள் சுந்தரின் மூத்த மனைவி ராதா.. “அம்மா, அம்மா ன்னு வாய் நிறைய உங்களத் தானே கூப்பிடுவன்? எனக்கு எந்த குறையும் நீங்க வைக்கல்லம்மா. நான் உங்க புள்ள இல்லயா? எனக்கு … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 23

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 22

இடைவேளை நேரம் “சுரேஷ், சுரேஷ்” அழைத்தது வசீகரா தான்.. துவரை எந்தப் பெண்களுடனும் பெரிதாக பேச்சுக் கொடுக்காதவன் வசீகராவின் அழைப்பு கேட்டு நடுங்கிப் போனான். அதுவும் தான் உள்ளத்தளவில் விரும்பும் பெண்ணாக அவளிருக்க, அவனுக்கு ஏதோ ஒரு பதற்றமாக இருந்தது. “சுரேஷ்” மீண்டும் அவளழைக்க அவன் நா தடுமாறியது. “ஓம் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்னா?” எதுவுமே அறியாதவன் போல் கேள்விக் கணையோடு வசீகராவை நோக்கினான். “சத்தியமா நான் என்ன பேச வந்திருக்கன்னு உங்களுக்கு தெரியாதா சுரேஷ்? … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 22

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 21

வத்சலா ஏதோ நெருடலாய் உணர, திரும்பித் திரும்பி சுரேஷினை நோட்டமிட்டாள். அவனின் வாடிய வதனம் அவளையும் தான் சங்கடப்படுத்தியது. எப்படியாவது சுரேஷிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென துடித்தாள். அன்றைய நாள் இப்படியே முடிய, அடுத்த நாள் காலை சுரேஷ் பாடசாலை வரும் போது வசீகரா மட்டும் தான் வந்திருந்தாள். அவளைக் கண்டதும் கோவமாய் வந்தது அவனுக்கு. ஆயினும் காட்டிக் கொள்ளாமல் மெதுவாக அவ்விடம் அகன்று போக முற்பட்டவனை, “ஹே சுரேஷ்..” தடுத்தது அவள் தான். “சுரேஷ் ஒரு … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 21

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 20

“வசீகரா முன்னால வா ஹே புதுப் பையா நீயும் தான் முன்னால வா” அடக் கடவுளே! போயும் போயும் இந்த சுரேஷுக்கு பகிடிவதை செய்ய இவளா தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்? இனித் துவங்கும் இவர்களின் சமாச்சாரம்.. இருவரும் முன்னால் வருகின்றனர். “வசீகரா நீ இந்தப் பக்கம் வா, இங்கப்பாரு இவ என்ன சொல்றாவோ அத அப்படியே செய்யனும் சரியா? சுரேஷ் தலையாட்ட, வசீகராவும் ஆயத்தமானாள். “உன் பெயர் என்ன? சுரேஷ் ஓஹ் சுரேஷ் எங்க எனக்கு சலூட் … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 20

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 19

ஆம் சுரேஷும் வயதுகளால் வளர உயர்தரம் வரை வந்துவிட்டான். வாணிக்கு பெண் பார்க்கும் படலமும்  ஆரம்பித்து விட்டது. அந்த காலத்துக்குள் உண்மையில் சுரேஷ் அப் பேரழகியை பார்த்திருக்கக் கூடாது. சாதாரண தரத்தில் திறமை சித்தி கொண்ட தன் மகன் உயர்தரமென்று வந்ததும் உயர்ந்த பாடசாலையில் பயில வேண்டுமென்று சுந்தர் நினைத்தமையினால் வந்த விளைவு தான் அது. முன்பு போல் தன்னோடு தன்னுயிர் தம்பி நெருங்கிப் பழகாமல் ஒதிங்கிருக்கும் நெருடல் வாணியை விட்டு வைக்கவில்லை. எத்தனையோ தடவைகள் ‘நீ … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 19

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 18

அங்கு அவனுக்கு இன்னுமோர் பேரதிர்ச்சி காத்துக் கிடந்தது. மீண்டும் விம்மி அழத் துவங்கி விட்டான். அவனுக்கு எதுவும் நிஐம் போல் தோன்றவில்லை.. உள்ளே ஓடிச் சென்றான். “என்ன என்ன மன்னிச்சிடு ராதா, நான் உனக்கு துரோகம் பண்ணிட்டன், கடவுள் என்ன தண்டிச்சிட்டான் ராதா, கடவுள் என்ன தண்டிச்சிட்டான்” அறைக்குள் தன் குழந்தையை வாரியணைத்துக் கொண்டிருந்த ராதாவை சுந்தர் உண்மையில் எதிர்பார்த்திருக்கவில்லை. நட்பை இழந்து விட்ட கவலையும், நம்பிக்கைக்கு மாறு செய்த கணவன் நிலைமையும் அவள் உள்ளத்தை வருத்தினாலும், … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 18

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 17

ஆனால் தன் மூத்த மனைவி ராதா தன்னைப் பின் தொடர்ந்து வருவாளென சுந்தர் கனவிலும் நினைத்திருக்கவில்லை வேகமும், பதற்றமும் அதிகமாக ஒருவாறு வத்சலா இருக்கும் இருப்பிடத்தை  அடைந்தான் சுந்தர். பின்னாலே வந்த ராதா, ‘இது வத்சலா சொன்ன இடம் போல இருக்கே’ குழம்பிப் போனாள். வீட்டைச் சூழ ஒரே ஆரவாரம், பக்கத்து வீட்டினர், பாதைப் பயணிகள், என எல்லோரும் பார்வையாளர்களாய் குழுமி இருந்தனர். என் வத்சலவாவுக்கு ஏதும் நடந்து விட்டதோ?’ துடித்துப் போனான் சுந்தர். ‘இந்த ஆம்புளகளே … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 17

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 16

அதற்குள் சுந்தரமும் இவ்வளவு தாமதமாகி  வத்சலா போயிருப்பாள் என்ற நினைப்பில. மனைவி ராதாவை சமாளிக்கும் திட்டத்தோடு வீட்டுக்குள் நுழைகின்றான். “அப்பாஹ்! வந்துட்டீங்களா? இவ்வளவு நேரமா உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்கோம்” மனைவி ராதா பரவசத்தில் மகிழ, “இந்த வத்சலா இன்னும் போவல்லயா?” படபடத்தது சுந்தருக்கு. “வத்சலா வத்சலா…” தன் நண்பியின் நாமத்தை சொல்லி கூப்பாடு போட்டுக் கொண்டே ராதா அறைக்குள் செல்ல நடுங்கத் துவங்கி விட்டான் சுத்தர். ஆனால் இங்கு தன் கணவனே தன்னவளதும் கணவனென்பதை அறிந்த … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 16

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 15

இங்கு நட்புக்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம். இருவர் முகங்களும் ஆனந்தத்தால் நிறைந்திருக்க, வத்சலா தான் பேச்சுப் போட்டாள். என்னடி வீட்டுல நீயும் புள்ளயும் மட்டுமா? கூடுதலா அப்படி தான் டி.. புருஷன் இப்போ ரொம்ப பிசி ஆவிட்டாரு. இன்னக்கியும் ஏதோ முக்கியமான வேல ஒன்னு இருக்காருன்னு போயிட்டாரு. ஹ்ம்ம் எல்லாருக்கும் இந்த நிலம போல தானிருக்கு. என்ன செய்யடீ? நாங்க தான் விட்டுக் கொடுத்து போவனும். ஹ்ம்ம்.. உனக்கு என்ன கொண்டு வர?  டீ, கூல்? ஏதாச்சும் … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 15

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 14

திசை மாறிய தீர்ப்புக்கள்

“சரி வத்சலா கண்டிப்பா வரனும்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த ராதா, “என்னங்க” என கணவனை தேடி குதூகலமாய் அறைக்குள் வந்தாள்.. மனைவி தன்னை நாடி வருவதனை ஊகித்துக் கொண்டே சுந்தர் ஓடிச் சென்று கட்டிலில் சாய்ந்து கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்தான். “என்னங்க.. என்னங்க” அறைக்குள் வந்தவள், கணவனை தட்டி எழுப்ப ஒன்றுமே தெரியாதவன் போல் கண்களை கசக்கிக் கொண்டு மனைவியைப் பார்த்தான். “என்னடீ? என்னங்க நான் சொன்னனே என் பிரன்ட் வத்சலா.. அதுக்கு என்ன … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 14

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 13

திசை மாறிய தீர்ப்புக்கள்

ஆம் வத்சலாவின் உயிர் நண்பி வேறு யாருமல்ல, சுந்தரின் முதல் மனைவி ராதாவுடனான உரையாடல் தானிது.. “நீ எதுக்கும் கவலபடாத வத்சலா, என்ன இருந்தாலும் எனக்கு போன் பண்ணு, தனிய இருக்குறதா யோசிச்சா என் வீட்டுக்கு வா, என்ன இருந்தாலும் என்கிட்ட சொல்லு ஓகேயா? கடவுள் எனக்கு ஆறுதலா உன்ன தருவான்னு நான் கனவுலயும் நம்பல்ல ராதா, உண்மையிலேயே இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாம் நலவுக்கு தான்டீ, வந்த காரியத்த முடிச்சிட்டு கவனமா வீடு … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 13

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 12

திசை மாறிய தீர்ப்புக்கள்

இப்போ எல்லாம் என் மேல பிரியம் இல்ல உங்களுக்கு. என்ன, நான் சொல்றதுகள வாங்கிக்கவே மாட்டீங்க, உன் அம்மா ஞாபகம் வருது எனக்கு” சின்னவள் போல் தேம்பித் தேம்பி அழுதவளின் வார்த்தைகள் அவனை சங்கடப் படுத்த, “அப்படி இல்லம்மா” என்ற ஒற்றை வார்த்தையோடு மனைவியை வாரி அணைத்துக் கொண்டான். இப்படி இருதரப்பும் முரண்பட்டுக் கொள்வது, பிறகு சமாளிப்பது என போதுமென்றாகி விட்டது சுந்தருக்கு. ஆயினும் தன் வாழ்க்கையில் இப்படியொரு சோதனையை சந்திக்க நேருமென்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 12

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 11

வாணி” வெளியே வந்த தாதி ஒருவர் பெயர் சொல்லி அழைக்க, மகளை வாரியெடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர். வைத்தியப் பரிசோசனைக்கு பிற்பாடு “பெரிதாக எதுவுமில்லை” என்ற பதில் தான் இவர்களை திருப்திப் படுத்திட்டு. தன் கைவிரல்களை இருகப் பற்றிக் கொண்டிருந்த மகளின் கன்னத்தை வருடி விட்டவனாய் வீட்டுக்கு அழைத்து வந்தான் சுந்தர். “டெடி இன்னக்கி எங்கயும் போக வேணாம்” நொடிக்கு நொடி தன் மகள் அதையே சொல்லிக் கொண்டிருக்க வத்சலாவின் நினைப்பை முழுதுமாய் மறந்து மகளுடன் … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 11

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 10

திசை மாறிய தீர்ப்புக்கள்

வைத்தியசாலைக்கு உள் சென்றதும் மீண்டும் மொபைல் அலற வத்சலாவை உள்ளே விட்டு விட்டு வெளியிறங்கி வந்தான். கணவனின் இந்த நிலைமை வத்சலாவுக்கு சிறிது சந்தேகத்தை கிளறி விட்டது. செக்கப்பை முடித்து விட்டு வெளியே வந்தாள். சுந்தர் யாருடனோ தூரமாய் கதைத்துக் கொண்டிருப்பதை கண்டவள் மெதுவாக அவன் பக்கம் நகர்ந்தாள். ஏதோ அவனின் நல்ல காலம் பின்னால் திரும்பிப் பார்த்தவன் வத்சலா தன்னை நோக்கி வருவதை கண்டு கொண்டான். “என்ன சரியா? என்ன சொன்னாங்க? ஹ்ம்ம் எல்லாம் நல்லாத் … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 10

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 09

திசை மாறிய தீர்ப்புக்கள்

காலச்சக்கரம் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. வத்சலா ஐந்துமாதக் கர்ப்பினியாக இருந்தாள். சுந்தர் எப்போதாவது வருவதும் போவதும் நான்கு, ஐந்து நாட்கள் வத்சலாவுடன் கழிப்பதும் அப்படியே காலங்கள் கடந்தன. சுந்தர் நிலை தடுமாறினான். பொருளாதாரப் பிரச்சினை வேறு தலை தூக்கியது. முதல் மனைவியிடம் பொய் சொல்வது, நேரம் கடந்து வீட்டுக்கு வருவது, குடும்ப விவகாரங்களில் மனைவியை மாத்திரம் கலந்து கொள்ளச் செய்வது, என எல்லாமே சர்வசாதாரணமாய் போயிற்று அவனுக்கு. எந்த நேரமும் தன் நினைப்பிலும், தங்களுடனும் கலகலப்பாய் இருந்த … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 09

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 08

திசை மாறிய தீர்ப்புக்கள்

டேய் ரவி.. ரவி… ரவி.. டேய்.. என்னடா? கோவ வெறியோடு திரும்பிப் பார்த்தான். என் நிலைமைய கொஞ்சம் புரிஞ்சிக்க ரவி பிளீஸ்.. டேய் நான் சவூதியில இருக்குறப்போ உனக்கு எத்துன தடவ சொல்லி இருப்பன்? கட்டின மனைவிக்கு துரோகம் செய்ய உனக்கெல்லாம் எப்புடிடா மனசு வருது? இப்போ அதெல்லாம் பேசி என்ன பிரயோசனம் ரவி? எனக்கு ஹெல்ப் பண்ணுடா பிலீஸ்..” சின்னவன் போல் சிணுங்கினான் சுந்தர். “சரி சரி சொல்லு… வத்சலா ஶ்ரீலங்கா வாராள்டா. கடவுளே! இப்போ … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 08

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 07

திசை மாறிய தீர்ப்புக்கள்

என்னங்க? என்ன ஆவிட்டு மனைவி வத்சலாவின் வார்த்தைகளை வாங்கிக் கொள்ளாமல் கதறி அழுதான் சுந்தர். கணவனின் நிலைமை கண்டு பதறிப் போன வத்சலா மீண்டும் மீண்டும் அவனை அழுத்தி காரணத்தை கேட்டுக் கொண்டிருந்தாள். “நான் அவசரமா ஶ்ரீலங்கா போவனும் அதிர்ந்து போனாள் வத்சலா என்ன சொல்றீங்க? எங்க அப்பா இறந்துட்டாரு. நான் அவசரமா போவனும் வத்சலா” கணவனின் கவலைக்கான காரணத்தை புரிந்து கொண்டவள். அவரை ஆயத்தப்படுத்தி வழியனுப்பி வைப்பதில் முனைப்பாக இருந்தாள். இவ்வாறு தாய்நாட்டுக்கு அவசரமாய் கிளம்பி … Read moreதிசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 07

Select your currency
LKR Sri Lankan rupee