பாராளுமன்ற சம்பளம் 12 மில்லியனை பகிர்ந்தளித்த கருணா கொடித்துவக்கு

 இரண்டு வருட கால (2020 – 2022) பாரளுமன்ற உறுப்பினர் சம்பளம்  உட்பட ஏனைய கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு என 12 மில்லியன் ரூபாவை மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு  பொதுமக்களுக்கு பகிர்ந்தளித்தார். இந்நிகழ்வு இன்று (18.09.2022) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு, பேராசிரியர் அத்தநாயக்க ஹேரத், மாலிம்பட பிரதேச சபை தலைவர் சோமசிறி, அகுறஸ்ஸ பிரதேச சபை தலைவர் முனிதாஸ கமகே, அதுரலிய பிரதேச தலைவர் […]

Read More

நோயாளிகளை இலக்கு வைத்து புதிய திருட்டு

இர்ஷாத் இமாமுதீன் இருபத்தைந்து வயது கணனி மென்பொருள் பொறியியலாளர் செய்த நவீன திருட்டே நாடளாவிய ரீதியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சிங்கப்பூரில் உயர் கல்வியை கற்ற ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 10 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை புற்று நோயாளர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களிடமிருந்து திருடி இருக்கிறான் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்திருட்டில் சிக்கிய அனைவரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்களை இலக்கு வைத்தே இத்திருட்டு நடவடிக்கைகளை மேற்படி நபர் மேற்கொண்டு வந்திருக்கிறான். புலனாய்வுத் திணைக்களத்தின் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 10

”எந்தேன் வாப்பா இவ்ளோ யோசின?” அவளைக் கூர்ந்து பார்த்தவர், ”இல்ல புள்ள குடும்பத்துல வார மொத கலியாணமேன்… அதுதான்…” புன்னகையை வரவழைத்துக் கொண்டு, ”அதெல்லம் ஹய்ரா நடக்கும்… நீங்க தலய பிச்சிகொல தேவில்ல…” பர்ஹாவின் வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தை உணர்ந்தவர் போல, ”மாப்புள ஒன்னோட பேசோணுமன்ட. கிட்டத்துல வாராம்…” அவர் அமைதியாக சொல்லிவிட்டு நகர்ந்தார். சித்தியும்மாவும், ”ஓ புள்ள… என்தியோ பேசோணுமாம் …. நல்லபடி நடக்கட்டும்…” ”சரியும்மா…. ஒகட விருப்பம்…” அவளது யோசனை எங்கோ சூனியத்தை நோக்கியதாக […]

Read More

ஏழைச் சிறுவனின் ஏக்கம்

பாடசாலை சென்றதில்லையடா பாடப் புத்தகமும் படித்தில்லையடா பையை சுமந்ததில்லையடா நண்பனொடு கைகோர்த்து போகனதில்லையடா! சீருடையும் அணிந்ததில்லையடா வீட்டுப்பாடம் செய்ததில்லையடா விரல் வலிக்க எழுதவில்லையடா! கண் விழித்து படிக்கவில்லையடா பரீட்சையும் எழுதவில்லையடா இதைக் கேட்க யாரும் இல்லையடா! ஏழையாய்ப் பிறந்துவிட்டால் கல்வியும் எட்டாகனியா ஏற்றம்வாழ்வில் வாராதோ ஏக்கமுடன் கேட்கின்றேன் நானும்! பதில் வேண்டுமடா என் கேள்விகளுக்கு! பாடசாலைப் போகவேண்டும் பாடமும் படிக்க வேண்டும் நண்பர்கள் விளையாட வேண்டும் வீடு சென்று பாடங்களை மீட்ட வேண்டும் அன்றாடப் பாடங்களை தாயிடம் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 09

”ஓ… புள்ள இந்த மாசம் தான்… தெரீம் தானே இப்பேக கலியாணத்த மிச்சம் காலத்துகு பேசி வெச்சேலா…. எப்டி சரி பிஞ்சி பெய்த்திடிய… அதான்… இவங்கட வாப்பாவே கேட்ட அவசரமாக கலியாணத்த நடத்தோம் என்டு…” சித்தியும்மா படபடப்புடன் கூறிவிட்டு நகர்ந்தார். அவரது முகத்தில் சந்தோசக்கலை எட்டிப்பார்த்தது. ‘யா அல்லா… ஏன்ட உம்மா, வாப்பாட மொகத்துல இந்தமாய் சந்தோசம் எப்போம் இருச்சோணும்’ பர்ஹாவின் மனது இறைவனை வேண்டியது. ”சரி… சரி…. எல்லம் ஹய்ர் தான்… அல்லா எந்த நாடீச்சோ […]

Read More

வதிவிட பயிற்சிப்பாசறை

இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறையொன்று கடந்தவாரம் அதிபர் தினேஷ் தலைமையில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. கொரோனா மற்றும் நாட்டின் ஸ்தம்பித நிலையால் பாதிக்கப்பட்டிருந்த கல்வி மற்றும் இணைப்பாடவித செயற்பாடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் தரம் 06 – 09வரையிலான மாணவர்களுக்கு இப்பாசறை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பாசறையின் இறுதிநாள் நிகழ்வுக்கு சப்ரகமுவ மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சகுந்தலா அவர்கள் கலந்துசிறப்பித்தது மட்டுமன்றி ரோயல் கல்லூரியில் இல்லாத சந்தோஷத்தை இங்கே நான் உணர்கிறேன் எனக்கூறியமை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும். […]

Read More

பயணம்

உலகில் உள்ள ஒவ்வொன்றும் உள்ளத்தில் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு உலாவித் திரிவதே உலகின் விதிமுறை! பயணிகள் பயணிக்கும் பயணங்கள் ஒவ்வொன்றும் பாதை முடிந்த பிறகும் பல கதைகள் சொல்லுமா? இல்லை பாதி வழியிலே பரிதவிக்க விடுமா? என்பது பயணியின் சிந்தனையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை! வாழும் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு பயணம்! எதற்காகவோ ஒரு பயணம்! எதைத்தேடியோ ஒரு பயணம்!! பிறப்பு முதல் இறப்பு வரை பயணம்! பயணம் என்பது பலர் மனம் வென்று […]

Read More

மக்கள் கைவிட்டபோதும் கைவிடாத கோட்டாவின் மனைவி

ஆர்.சிவராஜா உதவுவதாகக் கூறி இறுதிநேரம் கைவிட்ட இந்தியா இலங்கை விமானப்படை ஹெலி தரையிறங்க மாலைதீவில் அனுமதி மறுப்பு இறுதி நாளில் மிரிஹான வீட்டில் முக்கிய ஆவணங்களை அகற்றிய கோட்டாவின் துணைவியார் கோட்டாபய தோல்வியடைந்த தலைவராக வெளியேறியமைக்கான காரணங்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கு கடந்த 14 ஆம் திகதி வரை எந்த தீர்மானத்தையும் எடுத்திருக்கவில்லை. ஆனால் ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தையடுத்து ஏற்பட்ட அழுத்தங்களினால் அவருக்கு வேறு […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 08

”ஓ… இப்ப தான்…. அவசரமாக ரெடியாகுங்கோ மகள்….” சித்தியும்மா பரபரப்புடன் கூறிவிட்டு சென்றார். அக்கா, தங்கை இருவரின் முகத்திலும் இனம் புரியாத உணர்வொன்று ஒட்டிக் கொண்டது. ”இப்டியே பாத்துகொண்டீந்தா இனி சரிதான்… வா ரெடியாக ” பரீனா அவளது கைகளை பிடித்துச் சென்றாள். சற்று நேரத்தின் பின், கலகலப்பான பேச்சுக்கள் சுவாரசியமான சம்பாஷணைகள் என வந்தவர்களால் வீடே மாறியது. பர்ஹாவிற்கோ ஆயிரமாயிரம் எண்ண அலைகள் ஓடி மறைந்தன. ”தாத்தா… அவங்க கலியாணத்த அவசரமாக இந்த மாசமே வெச்சிகொலோம் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 07

பர்ஹா பரபரப்புடன் பரீனாவின் பின்னால் ஓடினாள். ”அடி… வாப்பா எந்துகன் கூப்புட்ட? ” அவளை மெதுவாகத் திரும்பிப் பார்த்த பரீனா, ”எனக்கு தெரியா? ஆனா… எந்தியோ நடக்க போற என்டு வெளங்கிய! ” அவளை கண்ணிமைக்காது பார்த்தவள், ”சரி… வா போம்..” இருவரும் வீட்டுக்குள் நுழைந்தவுடனே சித்தியும்மா பர்ஹாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு முன்னறையின் பக்கமாக நடந்தாள். ”உம்மா எந்தேன் நடக்கிய இங்க? ” மௌனமாகவே நடந்து சென்றாள். அந்த அறையில் பர்ஹாவின் வாப்பா தீவிரமாக ஏதோ […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 06

”ஏய்…. என்னயே எந்துகன் பாத்துகொண்டீச்சிய செல்லுவே?” பர்ஹாவிற்கு அவளது முகத்தில் ஆயிரமாயிரம் பாவனைகள் தெரிந்தது. சட்டென கைகளைப் பற்றி, ”அவ… அவ நிச்சி சும்மா…. அவ ஒன்டும் செல்லல்ல….” ”பொய் செல்லாத… அவவ பத்தி எனக்கு தெரீம்… நான் தலாக் வாங்கின பொம்புலயன்டு ஏசின தானே?” ”அப்டி ஒன்டுமில்ல…. தெரீம் தானே அவட வயசுக்கு சும்ம ஒளம்பிய…. அத கனகெடுகக் வேணம்….” ஏளனமான புன்னகையை உதிர்த்தவள், ”அவ செல்லியதும் சரி தான் இனி….. இந்த சமூகமே பொம்புளேக்கி […]

Read More

The Real Super Hero

உள்ளுக்குள் ஆயிரம் காயங்களை மறைத்து தன் பிள்ளையின் சந்தோசம் நிலைக்க வெளியில் பொய்யாய் சிரிக்கும் ஓருயிர்… சிந்தும் வியர்வையை ஒரு பொருட்டாக நினையாது பிள்ளையின் வாழ்வு சிறக்கத் துடிக்கும் உயிரது.. சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைத்து பிள்ளைகளின் ஆசைகளை தலையில் சுமந்து அதனை நிறைவேற்றத் துடிக்கும் அவரின் நெஞ்சம், அவரின் உழைக்கும் கரங்கள் நாம் இலட்சியம் காண உதவும் விதங்கள் எத்தனையோ… தந்தை என்பது வெறும் வார்த்தையல்ல அது உயிருடன் உலாவும் போது நம் பார்வைகள் பெரிதாக […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 05

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திறந்தவள், ”பர்ஹா…. வா… உள்ளுகு…. நான் நெனச்ச நீ வாரல்லயோ தெரியாவன்டு” பர்ஹா மௌனமாகவே உள்ளே சென்று அமர்ந்தாள். ”சரி…. எந்தேன் விஷேசம் இன்டேகி ஒகடூட்ல….” அவள் தலையைக் குனித்துக் கொண்டாள். ”ஏய்… பர்ஹா… நீ வழமேக்கி இப்டி இல்லயே…. எந்தேன் ஆகின ஒனக்கு…” சட்டென ஷிப்னாவை அணைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள். ”அல்லாவே….. எந்தேன் நடந்த ஒனக்கு…. கலியாணம் சரிவரல்லயா?” அவளது பிடி மேலும் இருகியது. ஆதரவாக ஷிப்னாவின் கைகளும் அவளது […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 04

”ஹேய் பர்ஹா நான் செல்லீச்சி தானே அந்த குட்டியோட பேச வேணாம் என்டு” அவளின் உமும்மா முறைத்துப் பார்த்தார். ”அல்லாவே! அவ தான் பேச வந்த என்னோட பாவம் அவ” ”ஓ இனி பாவம் புண்ணியம் எல்லம் பாத்துகொண்டீந்தா சரி இனி அவளோட மறுபடி பேசியத கண்டா பாத்துகொல ஏலும்.” முகத்தை திருப்பியபடி சென்று விட்ட உமும்மாவை எப்படி பார்ப்பதென அவளுக்கு தெரியவில்லை. மறுநாள் பொழுது வழமை போலவே விடிந்தது. பர்ஹா குளித்து விட்டு மொட்டை மாடியில் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 03

”செல்லுங்கோ…?” ஷிப்னா அவளைப் பார்த்து புன்னகைக்க, அவளுக்குள் இனம் புரியாத எண்ணங்கள் ஓடி மறைந்தன. ”ஹ்ம்ம்….. இந்த ஆம்புளேகள பத்தி நீ எந்தேன் நெனச்சிய?” ஷிப்னாவின் திடீர் கேள்வியால் அவள் ஆடிப் போனாள். மௌனமான அவளது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள் போல சிரித்துவிட்டு, ” நீ யோசிச்சிய…. நானே செல்லியன்…. அவனுக சரியான ஒட்டுண்ணீக….” மீண்டும் அவளைப் பார்த்து, ”ஒட்டுண்ணி அப்டியன்டா ஒனக்கு தெரீம் தானே! நீ தானே சயன்ஸ் படிச்சவ…” பர்ஹா புன்னகைத்தாள். ”நீ […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 02

”நீங்களா? ” அவளது நா தடுமாறியது. வந்தவள் பர்ஹாவைப் பார்த்து புன்முறுவலுடன், ”ஏ…. நான் வரப்படாதா ஓன்ட ஊட்டுகு? ” ”அல்லாவே…. அப்டி ஒன்றுமில்ல… ஷிப்ன தாத்தா… ஒகட இத்தா முடிஞ்சா?” ”ஓ… அது நேத்து….” அவள் ஏதோ சொல்ல வாயை திறந்தவுடனே, ”தாத்தா… வா” பரீனா இழுத்துக் கொண்டு சென்று விட்டாள். அவளுக்குள் வந்தவர்களைக் கண்டவுடன் சற்று தயக்கமாக இருந்தது. சமாளித்துக் கொண்டு புன்னகையை வரவழைத்துக் கொண்டு ”அஸ் ஸலாமு அலைக்கும் ” என்ற முகமனுடன் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 01

”புள்ள…. அவசரமா தாத்தாவ கூட்டி கொண்டு வாங்கோ….” சித்தியும்மா பரபரப்பாக கூறிவிட்டு சென்றார். பரீனா புன்னகையுடன் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள். ”ஏய்…. லூசு ஒன்ன தான் பாக்க வநதீச்சி… எந்துகன் ரெடியாகாம கல்லுலி மங்கன் மாய் நிச்சிய…. வாவே உம்மா கூப்புட்ட….” இவ்வார்த்தைகளைக் கேட்டவள் கேட்காதது போல முகத்தைத் திருப்ப, மீண்டும் பரீனா ”அடியேய்…. ஸொரி டீ… இப்ப வாவேன்…. வந்தீச்சிய எடம் நல்லம் என்டு வாப்பா பேசிகொண்டீந்த…. வாவே இந்த ‘பச்ச கலர் […]

Read More

பாதையோரமாய்

அம்மா சிறுவயதில் போலின்கள் இருந்தாக புராணக்கதை போல் சொல்லியிருக்கிறார் சிறுமியாய் நான் இருக்கையிலே இன்றைய அவலம் மீண்டும் அதே சித்திரம் சுவரோவியமாய் வரையப்படுகின்றது வலிகளை அள்ளிக்கொடுக்கின்றது வஞ்சகமில்லாமலே போனவர் சீக்கிரம் வரவேண்டுமென போfனடித்து பார்த்தே பாதி நேரம் போகிறது வீட்டிலே படபடக்கும் நெஞ்சுடன் பாதையோரமாயே எங்கள் பாதி எதிர்காலம் சீரழிகிறது எதிர்த்து நிற்க வழியெதுவென எண்ணியே தலையில் உள்ள முடி எச்சிலாய் குப்பையாய் குப்பைத்தொட்டிக்கு சென்றுகொண்டிருக்கிறது. BINTH AMEEN BA (SEUSL) SLTS

Read More

போராட்டத்துடன் தேசத்தை கட்டியெழுப்புவோம்

தாக்குதல் அரச தரப்பின் சதியா? நாடாளாவிய ரீதியில் 09,10.05.2022 திகதிகளில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களில் 103 வீடுகள் உட்பட 08 மரணங்கள் பதிவாகியுள்ளன. (புள்ளிவிபரங்கள் மாறலாம்) இந்நிலையில் இவ்வாறு திங்கட்கிழமை முதல் இடம்பெற்ற தொடர் தாக்குதலுக்கான உடனடிக் காரணம் எதுவென்று அவதானித்தால் அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் பிரதமருக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மைனா கோ கம மக்கள் மற்றும் ஜனாதிபதிக்கு […]

Read More

இஸ்லாம் எதிர்பார்க்கும் நீதியான ஆட்சி

இலங்கையில் கோட்டா கோ கம மக்கள் எழுச்சியுடன் தொடர்ந்து ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அம் மக்கள் எழுச்சியின் நோக்கம் இலங்கையில் நீதியானதொரு ஆட்சியை உருவாக்குவதாகும். இச் சந்தர்ப்பத்தில் நீதியான ஆட்சியை நிலைநாட்ட இஸ்லாம் வழங்கியுள்ள சில வழிகாட்டலை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்காமாகும். இஸ்லாம் என்பது எக்காலத்திற்கும் பொருத்தமான வாழ்க்கைநெறியாகும். சாந்தியையும் சமாதானத்தையும் நிலை நாட்டக்கூடிய ஒரு நடுநிலை மார்க்கமாகவே வள்ளோனவனால் இறக்கியருளப்பட்டது. அந்த வகையில் அனைத்து […]

Read More