கணிதம் – சாதாரண தரம்
சாதாரண தரப் பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு தனது முதல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
பொதுவாக பாடசாலை மாணவர்களிடம் கேட்டால் கஷ்டமான பாடம் கணிதம் என்றுதான் சொல்கின்றனர்.
என்றாலும் உண்மையிலே இலகுவான அதிலும் குறிப்பாக எதிர்பார்க்கை வினாக்களில் 75% வினாக்களை முற்கூட்டியே தீர்மானிக்க முடியுமான ஓர் வினாப்பத்திரமே கணித வினாப்பத்திரம் அவ்வகையில் சாதாரண தர கணித பாடத்தில் வரமுடியும் என எதிர்பார்க்கின்ற வினாக்களை பாடங்களாக வகைப்படுத்தி வினாப்பத்திரம் தயாரித்துள்ளோம் தேவையான மாணவர்கள் வினாப்பத்திரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இவ்வினாப்பத்திர தொகுப்பானது 2016-2024 வரை வெளியாகின க.பொ.த (சா/த) பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது
கணிதம் I
பகுதி A
இப் பகுதி 25 வினாக்களைக் கொண்டது. அதை 6 பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தியுள்ளோம். மொத்தப் புள்ளி 50
1. எண் கணிதம்
2. புள்ளிவிபரவியல்
3. அட்சர கணிதம்
4. வட்ட தேற்றம்
5. கேந்திர கணிதம்
6. அளவீடு
பகுதி B
இப் பகுதியிலுள்ள 5 வினாக்களும் கட்டாயமாகும். ஒவ்வொரு வினாவுக்கும் 10 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் பொதுவாக இப்பகுதியில் பின்னங்கள், தரவு வகை குறித்தல், நிகழ்தகவு, சதவீதம், பங்குச்சந்தை, சுற்றளவு, பரப்பளவு, கதி ஆகிய பாடப்பரப்புக்களை உள்ளடக்கிய வினாக்களே வினவப்படுகின்றன.
1. பின்னம்
2. நிகழ்தகவு
3. பங்குச்சந்தை, சதவீதம்
4. தரவு வகைகுறித்தல்
5. சுற்றளவு, பரப்பளவு
6. கதி
கணிதம் II
பகுதி A
இப் பகுதி 06 வினாக்களைக் கொண்டது அதில் 05 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். மொத்தப் புள்ளி 50
1. சதவீதம்
2. வரைபுகள்
3. அளவிடைப்படம்
4. ஒருங்கமைச் சமன்பாடு
5. இருபடிச் சமன்பாடு
6. மீடிறன் பரம்பல்
பகுதி B
இப் பகுதி 06 வினாக்களைக் கொண்டது அதில் 05 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். மொத்தப் புள்ளி 50
