தென்னிலங்கையில் பிரசித்தி பெற்ற போர்வை கந்தூரி

தென்னிலங்கையில் பிரசித்தி பெற்ற போர்வை தர்காவின் ஸெய்யிது ஸாதாத் பகீர் முஹியத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் நினைவாக போர்வை பாரிய கந்தூரி ஒக்டோபர் 20 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெறவுள்ளது.

மாத்தறை மாவட்ட அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட போர்வை (கொடப்பிட்டிய) கிராமத்தில் அமைந்துள்ள போர்வை   முஹியந்தீன் ஜும்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘ஸெய்யிது ஸாதாத் பக்கீர் முஹியத்தீன்’ வலியுல்லாஹ் அவர்களின் பெயரால் வருடாந்தம் நடத்தப்படும் பாரிய கந்தூரி வைபவம் இம்மாதம் (ஒக்டோபர்) 09ஆம் திகதி அஸர் தொழுகையை தொடர்ந்து கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 18 ஆந் திகதி வெள்ளி பின்னேரம் சனி இரவு பக்கீர் ஜமாஅத்தின் றிபாய் றாத்திப் இடம்பெறவுள்ளது.

மேலும் 19 ஆந் திகதி சனி பின்னேரம் ஞாயிறு இரவு தென்னிலங்கையில் பிரசித்தி பெற்ற போர்வையூர் றிபாய் றாத்திப் இடம்பெறவுள்ளது.

அத்துடன் 20 ஆந் திகதி ஞாயிறு பகல் 1.30 மணிக்கு  மவ்லூத் தமாம் செய்து துஆ ஒதப்பட்டு கந்தூரி வழங்கப்படும்.

பொது அலுவல்கள் அமைச்சின் 175 ஆம் இலக்க புனித யாத்திரை கட்டளைச் சட்டத்தின் கீழ் 1954 ஆம் ஆண்டு உற்சவமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போர்வை பாரிய கந்தூரிக்கு சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, அனைத்தும் அதுரலிய அரசாங்க அதிபர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இக் கந்தூரிக்கான நேர்ச்சைகள், காணிக்கைகள் சேகரிக்க எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை, எனவே பள்ளிப் பரிபாலன சபைக் காரியாலயத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *