நிகழ்வுகளும் நினைவுபடுத்தவேண்டியவையும்

ஜனவரி என்பதால் எங்கு பார்த்தாலும்
நிகழ்வுகள் அரங்கேறியவண்ணம்தான் இருக்கின்றன. திருமணம் ,களியாட்ட நிகழ்வுகள் என அத்தனையும் நிரம்பிவழிவதை வட்சப் ஸ்டேடஸ்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
நிகழ்வுகளால் அனைவரும் ஒன்றுசேரும் சந்தர்ப்பங்கள் அதிகமாகின்றன .அவை பல மகிழ்ச்சிகரமான தருணங்களை அள்ளித்தருகின்ற வேளை கசப்புகளையும் கூட
விட்டுச்செல்கின்றன.
நிகழ்வுகள் எம் உறவுகளை ,நண்பர்களை இணைக்கும் பாலமாய் தொழிற்படுகின்றன.நீண்ட நாளைக்கு பின்னர் அவர்களை கண்ட மகிழ்ச்சி முழுநாளும் உந்துசக்தியாய் உடல்முழுதும் ஓடிக்கொண்டிருக்கும்.
அவர்களின் உடல், உள அத்தனை மாற்றமும் குழந்தைகள், கணவன் என புதிதாய் ஒட்டிக்கொண்டவர்களும் எம்மை வெகுசீக்கிரம் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன
கண்டவுடன் பேசப்படும் அன்பின் மொழிகள் என்றும் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கும். அந்த மகிழ்சிக்கு வார்த்தைகள் ஈடாகாது. ஓர் மனிதனை மனிதனாக சித்தரிப்பதே அவனது நடத்தையும் பேச்சுமாகும்.
எவ்வளவழகாய் பேசுகிறோமே அவ்வளவு ஆழமாய் நாங்கள் மதிக்கப்படுவோம்.
சிலர் சிலரைக் கண்டவுடனேயே ஏன் இம்முட்டு உடம்பு, முள்ளுமாரி என பல விதத்தில் தம் பேச்சை ஆரம்பிப்பதுண்டு. நிச்சயமாக இது தவிர்க்கப்படவேண்டியதாகும். வலிகளுடன் திரியும் மனிதனை கடவுள் கூட்டாக வாழவைத்ததே வலிமறக்கவாகும். மாறாக இப்பேச்சுக்கள் இன்று வலிக்கு வழிப்பாதையை அமைத்துக்கொண்டிருக்கின்றது.
திருமணமாகாதவர்களைப்பார்த்து “நீ இனி வீட்டிலே முடங்கிகிட வயசுபோயாச்சி “என்றும் பரீட்சையில் கோட்டையிட்டவனை “நீ படிச்ச தெறம்தான் “என்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை மறக்காமல் பலர் செய்துகொண்டிருக்கின்றர்.
கடவுள் இதற்கெல்லாம் தண்டிக்கப்போனால் உலகம் இயங்க முடியாமல் போய்விடும். இம் முதல் மாதத்திலிருந்தேனும் சபதம் எடுப்போம் அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மட்டும் பேசுவோம் என்று இன்ஷாஅல்லாஹ்

 Bindh Ameen

SEUSL

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

Author: admin