ஹஸீனா என்ன சொல்லப் போகிறாள்?

அவளோடு சில நொடிகள்
தொடர்:- 05

கறுப்பு நிற வர்ணம் தீட்டப்பட்ட கார் ஒன்று கோர்ன் சத்தம் எழுப்பிக் கொண்டு நஸீமின் வீட்டு லேனுக்குள் நுழைந்து கொண்டது.

“இந்தா அவங்க எல்லாரும் வந்துட்டாங்க”

வெளியில் இருந்து வந்த குரல் கேட்டு, வந்த மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க நஸீம் வீட்டினர் வாசல் வரை வந்து அவர்களை வரவேற்றார்கள். புன்னகைத்த முகங்களுடன் சலாம் சொல்லிக் கொண்டே மாப்பிள்ளை வீட்டாரும் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள்.

தேவதைக்கு மணப்பேச்சு வீடு முழுக்க சிறார்களின் ஆனந்த கூச்சல் அனைத்திலும் தன்னை மறந்து போய் ஏனோ தானோ என்றிருந்தாள் பசியா.

“எவளவு அழகா இருக்கான்னு தெரியுமா? கொஞ்சம் நிமிர்ந்து தான் பாறன். இன்னைக்கு எல்லார்ற கண்ணும் உன்ல தான்”

என்று சொல்லிச் சிரித்தாள் ஹஸீனா. ஆயிரம் வலிகளை தனக்குள் ஒழித்து வைத்துக் கொண்டு தன் குடும்பத்திற்காக யாவர் முன்னிலையிலும் புன்னகை தூவி நின்றாள் அவள். யாருக்காக அவள் சிரித்து சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொண்டாளோ அவளுடைய முகத்தில் சந்தோஷத்திற்கான ஊசலாட்டம் கொஞ்சம் கூட தென்பட்டிருக்கவில்லை.

“நம்மட கத எதுவுமே இவட காதுல விலமாட்டிங்குது பாத்திங்களா மைனி முகத்ல ஒரு சிரிப்பு கூட இல்லாம இருக்கா.”

“பசியா கொஞ்சமாவது முகத்த நல்லா வெச்சிகிட்டு வாமா.” என்றாள் மைனி சுலைஹா.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே பசியாவை அழைத்து செல்ல தயாரானார்கள். அதுவரை சாதுவாக இருந்தவள் கிளர ஆரம்பித்தாள்.

“இல்ல எனக்கு ஏழா நா வர மாட்டன் நா வரமாட்டன்.”

“என்ன பசி இது எல்லாரும் வைட் பன்னிட்டிருக்காங்க வா போவம்.” கையை பிடித்து இழுத்தாள் ஹஸீனா.

“விடு என்ன விடு”

“அடம்பிடிக்காத பசி எல்லாரும் வந்திருக்கக்கொல நீ வரமாட்டன்னு சொன்னா நல்லாவா இருக்கு? வா போவம்”

“இல்ல மைனி நான் அங்க வாரண்டா இவ எனக்கு ஒரு சத்தியம் பன்னி தரனும் அப்பதான் நான் வருவன்”

“நா நான் என்ன சத்தியம் பன்னனும்” தயங்கியபடி குரல் எழுப்பினாள் ஹஸீனா

“நீ கல்யாணம் பன்னிக்குவேண்டு சத்தியம் பன்னு. அப்பதான் நான் வருவன். இல்லாட்டி அவங்களுக்கு முன்னுக்கு நான் வரவே மாட்டன்”

ஹஸீனா எதிர்பார்க்காத படி அவளுடைய தலையில் சத்தியம் என்ற பெயரில் இடியையே விழுத்தாட்டி விட்டாள் பசியா.

“இது பிடிவாதம் பிடிக்கும் டைம் இல்லா பசி நீ வரமாட்டன்னு சொன்னா அவளவு பேருக்கு முன்னுக்கும் வாப்பா உம்மா அவமானப் படுறநிலம வந்துரும்.”

“இல்ல நான் முடிவ மாத்திக்கிறதா இல்ல. யாரோ என்னமோ சொல்லிட்டாங்கன்னு ஒன்ட வாழ்க்கைய நீயே அழிச்சிக்கிட்டு இருக்க..யார் யாருக்காகவோ நாம வாழ ஏழாது நமக்காக தான் நாம வாழனும். எப்பயாவது நீ உனக்காக யோசிச்சிருக்கியா? மாமில்ல மாமால்ல யாரு வந்து சொன்னாலும் உன்ன பத்தி உனக்கு தெரியும் எங்க எல்லாருக்கும் தெரியும். உன்ட வாழ்க்கைய நீயே தொலச்சிடாத ப்ளீஸ். நான் மட்டும் சந்தோஷமா வாழனும்னு நினைக்கா. நீ சந்நோஷமா வாழனும்னு ஏக்கத்தோட காத்திருக்குற எங்களுக்கு சந்தோஷத்த தர மாட்டியா. நீ சந்தோஷமா வாழ்றத்த ஒரு நாள் இல்ல காலம்பூரா நான் பாக்கனும் ப்ளீஸ் புரிஞ்சிக்க.”

“இல்ல என்னால என்னால இப்ப அதெல்லாம் பத்தி யோசிக்க ஏழா. நீ வா போவம் எல்லாரும் வைட் பன்றாங்க.” ஹஸீனா மறுபடியும் அவளுடைய கையை பிடித்து இழுத்தாள் அவளோ தட்டிக்கழித்தாள்

“விடு சொல்றன் தான நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சாத்தான் நான் வருவன். இல்லன்னா வர மாட்டன்”

“ஹஸீனா இன்னும் என்ன செய்றிங்க டக்கன பசியாவ கூட்டிகிட்டு வாங்கம்மா”

என்ன செய்வதென்று செய்யாமல் அவர்கள் திணறிக் கொண்டிருந்த வேளை, அந்த அறைக்கு வெளியில் இருந்து ஒரு குரல் சப்தமாய் தலைகாட்டி மறைந்தது.

“ஆ இந்தா வாரம்.”

“பசியா அவ ஏழான்டு சொல்லக்கோல திரும்ப திரும்ப அவட கல்யாணத்த பத்தி பேசி எல்லாரும் வந்திருக்குற டைம்ல நீ இப்புடி அடம்புடிக்குறது நல்லா இல்ல. நீ எல்லாதையும் புரிஞ்சி நடக்குறவ. இப்ப இப்புடியெல்லாம் செய்றது சரில்ல. அவங்க வந்து கன்நேரமா பெய்த்து இனியும் போகாட்டி எதாவது நினச்சிக்குவாங்க.”

“ஏழா மைனி உங்க எல்லாருக்கும் எப்புடி என்ட கல்யாணம் முக்கியமோ அதப் போலதான் எனக்கு இவட கல்யாணமும் முக்கியம். இவ உள்ளுக்குள்ளயே ஒவ்வொரு நாளும் வலியோட போராடக்கோல என்னால் மட்டும் எப்புடி சந்தோஷமா வாழ்க்கையை வாழ ஏழும்டு நினைக்கிறிங்க? “

“பசியா எல்லாரும் வந்திருக்கக்கோல நீ இப்புடி செய்றது தப்பு வா போவம்.”

“எனக்கு அதெல்லாம் தெரியா. இதுவரைக்கும் எனக்காக நான் உனக்கிட்ட எதுவுமே கேக்கல்ல பெஸ்ட் டைம் கேக்கன் நான் சந்தோசமா என்ட வாழ்க்கய ஆரம்பிக்கனும்னா நீயும் கல்யாணத்துக்கு சம்மதிக்கனும் இல்லாட்டி உன்னைப் போலயே நானும் உன்னோடயே இருக்கன் “

“ப்ளீஸ் பிடிவாதம் புடிக்காத பசி எல்லாரும் வைட் பன்றாங்க என்னால் என்னால் கல்யானத்த பத்தியெல்லாம் இப்ப யோசிக்க கூட ஏழாது இதுக்குள்ள நீ வேற “

“நீ சம்மதிச்சா நா வாரன் இல்லன்னா யாரு சொன்னாலும் நான் வரவே மாட்டன்.”

“புரிஞ்சிக்க பசியா என்ட இடத்துல நீயே இருந்திருந்தாலும் இப்புடித்தான் இருந்திருப்பா என்னால எப்புடி எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா இருக்க ஏழும். மாமியாக்கள் நம்மட உறவே வேணாண்டு இருக்ககோல நான் கல்யாணம் பன்னினா அவங்கட கோபம் இன்னும் அதிமாவுமே தவிர கொஞ்சம் கூட குறையாது புரிஞ்சிக்க”

“எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். எத்தனையோ வருசம் பிரிஞ்சிருந்த குடும்பமும் ஒத்துமையாவி சந்தோஷமா வாழ்றத நாம பாக்கல்லயா? மாமியாக்கள்ற கோபமும் கொஞ்ச காலத்துக்குத் தான் அவங்க ஒத்துமையாகனும்னு காத்துக்கிட்டு இருக்குறதுக்கு உனக்கு இன்னும் வயசு இல்ல.”

“எனக்கு உம்மா வாப்பாவோட வாழ்ற வாழ்க்கையும் சந்தோஷத்த தான் தரும். இதுக்குள்ள புதுசா எந்த உறவும் வானாது.”

“ஹ்ம்ம். எத்தன காலத்துக்கு உம்மா வாப்பாவோட இருப்பா. அப்ப நானும் உம்மா வாப்பாவோட இருக்குறது தான் சந்தோஷம்னு சொல்லிக்கிட்டு இருக்கனெ.”

“பசியா உன்ட நிலம வேற என்ட நிலம வேற.”

“என்ன? எல்லார்ற நிலமையும் ஒன்னுதான் நீ அனுபவிக்கிற வேதனய விட உன்ன பாத்துப் பாத்து நாங்க அனுபவிக்குற வேதுன உன்ன விட பல மடங்கு. நீ உண்மையா சிரிச்சி ஒன்னர வருசமாவிட்டு ஒன்ட முகத்துல இருந்த பழய சந்தோசத்த நாங்க பாத்து ஒன்னர வருசம். உன்ன பழய ஹஸீனாவா பாக்கனும்னு நாங்க எல்லாரும் தவியா தவிச்சிக்கிட்டு இருக்கம் புரிஞ்சிக்க. உம்மா வாப்பா இருக்கும் வரைக்கும் அவங்கள சந்தோஷமா வெச்சிக்கனும் அதயும் மறந்துடாத அவங்கட சந்தோஷமே நம்மட கல்யாணம் தான் நல்லா யோசிச்சி நல்ல முடிவ சொல்லு”

ஹஸீனா என்ன சொல்லப் போகிறாள்?

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி
Author: admin